Chengalpattu

News April 29, 2024

செங்கல்பட்டு: பெட்ரோல் குண்டு வீச்சு

image

செங்கல்பட்டு மாவட்டம் நெடுங்குன்றம் ஊராட்சி 12வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் அமமுக கட்சியை சேர்ந்த முத்துப்பாண்டி (62). இவர் பஜனை கோவில் தெரு கொளப்பாக்கத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை ஹோட்டல் முன்பு கேட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடினர். இதுகுறித்த புகாரின் பேரில் கிளாம்பாக்கம் மற்றும் ஓட்டேரி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 29, 2024

செங்கல்பட்டு: நூதன முறையில் செயின் பறிப்பு

image

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த விஐபி நகரைச் சேர்ந்த தம்பதி ராஜாராம் (68) – லட்சுமி (58), நேற்று காலை லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் வீடு வாடகைக்கு வேண்டும் என கூறியுள்ளார். லட்சுமி எதிர்பாராத நேரத்தில் திடீரென அவரது கழுத்தில் இருந்த 8 சவரன் தங்க சங்கிலியை பறித்து தப்பியோடினார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 29, 2024

மாமல்லபுரத்தில் களைகட்டும் மாம்பழ விற்பனை

image

மாமல்லபுரம் அருகே இடைக்கழிநாடு, கூவத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தனியார் தோப்புகளில், ருமானி, பங்கனபள்ளி , நீலம் உள்ளிட்ட மாம்பழ வகைகள் பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் மாம்பழங்கள் இயற்கையாக பழுக்க வைப்பதால் இந்த பழங்களை வாங்க மொத்த வியாபாரிகள், சில மாதங்கள் முன்பே, குறிப்பிட்ட தொகைக்கு குத்தகை பெறுகின்றனர். இந்நிலையில் தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால் விற்பனை களைகட்ட துவங்கியுள்ளது.

News April 29, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் நீர்மோர்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் பொதுமக்களுக்கு ஜூன் மாதம் வரை நாள்தோறும் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சியை இன்று (ஏப்ரல் 29) ஆட்சியர் ச.அருண்ராஜ் தொடங்கி வைத்தார். மகளிர் திட்ட இயக்குனர் மணி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News April 29, 2024

செங்கல்பட்டு: 2329 காலி பணியிடங்கள் அறிவிப்பு

image

தமிழகத்தில் உள்ள மாவட்ட கோர்ட்டுகளில் 2329 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது விருப்பம்போல் எதாவது ஒரு மாவட்டத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். அதன்படி செங்கல்பட்டு,காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்ட நீதித்துறையில் 151 காலியிடங்கள் உள்ளன. இதில் விண்ணப்பிக்க<> https.//www.mhc.tn.gov.in<<>> என்ற இணைய தளத்தில் மே.27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News April 29, 2024

விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

image

பாலூர் பிர்கா பாலாற்று படுகை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் வில்லியம்பாக்கம் பகுதியில் நேற்று (ஏப்ரல்-28) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைவர் தனசேகரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்துக்கொண்டனர். ஒரு ஏக்கருக்கு 40 மூட்டைகளை மாவட்ட நிர்வாகம் கொள்முதல் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News April 28, 2024

செங்கல்பட்டு அருகே விபத்து

image

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் நேற்று மதியம் தனது காரில் மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மேல்மருவத்தூர் அருகே வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 27, 2024

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏ.டி.எம் மையம்

image

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏடிஎம் மையம் இல்லாததால் பயணிகள் அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாயினர். இதையடுத்து பயணிகளின் கோரிக்கையை ஏற்று பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் ஏடிஎம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி தற்போது IOB வங்கியின் சார்பில் பேருந்து நுழைவு வாயிலில் புதிய ஏடி.எம் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

News April 27, 2024

செங்கல்பட்டு: சிக்கனில் நெளிந்த புழு

image

தாம்பரத்தை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன். இவர் நேற்று மதியம் முடிச்சூர் சாலையில் உள்ள அலீப் பிரியாணி கடையில் செட்டிநாடு சிக்கன் பார்சல் வாங்கி சென்றார். பின்பு வீட்டிற்கு சென்று பார்சலை திறந்த போது, சிக்கனில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பிரியாணி கடையில் கேட்ட போது முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சௌந்தர்ராஜன் மற்றும் வாடிக்கையாளர்கள் கடையை முற்றுகையிட்டனர்.

News April 27, 2024

செங்கல்பட்டு: ஆட்சியர் அதிரடி உத்தரவு

image

திருக்கழுக்குன்றத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் தலமாக விளங்கும் ஸ்ரீ வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சங்க தீர்த்த களத்தில் கழிவு நீர்கள் கலந்து அசுத்தம் ஏற்பட்டுள்ளது.  அதனை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டு குளத்தை தூர்வார உத்தரவு பிறப்பித்துள்ளார்.