Chengalpattu

News December 24, 2024

செங்கல்பட்டில் நாளை குறை கேட்பு கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை(டிச.23) மாலை 3 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நள்ளிரவு மையத்தில் மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் தலைமையில் குறை கேட்டு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கோரிக்கை மனுக்களை பெறுகிறார். இந்த குறை கேட்பு கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கின்றனர்.

News December 23, 2024

படூர் பகுதியில் உலக சாதனை நிகழ்த்திய UKG சிறுவன்

image

படூர் ஊராட்சியில் வசித்து வரும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் – அருணா தம்பதியரின் இளைய மகன் ரக்ஷன் (6) தனியார் பள்ளியில் UKG படித்து வருகிறார். இவர் கைகளை பின்னால் கட்டிக் கொண்டு 25 மீட்டர் தூரத்தை 33 வினாடிகளில் நீச்சலடித்து கடந்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். இவரை பலரும் பாராட்டி வருகின்றனர். நாமும் பாராட்டலாமே. ஷேர் பண்ணுங்க. 

News December 23, 2024

இழப்பீடு தருவதாக பயணிகளிடம் பேசும் மோசடி கும்பல்

image

விமானங்கள் தாமதம் அல்லது ரத்து போன்றவைகளால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு, இழப்பீடுகள் கொடுக்கப்படுவதாக பயணிகளை ஏமாற்றும் மோசடி கும்பல் அதிகரித்துள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தில் இருந்து பேசுவது போல், போலியான செல்போன் அழைப்புகள் மூலம் பயணிகளிடம் பேசி அவர்களின் ஆதார் பான் வங்கிக் கணக்கு விவரங்களை சேகரிக்கும் மோசடி கும்பல் குறித்து, இந்திய விமான நிலைய ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News December 23, 2024

நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

image

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – தென்மேற்கு திசையில் நாளை (டிச.24) தென்மேற்கு வங்கக் கடல் பகுதியை ஒட்டிய வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நாளை (டிச.24) செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்.

News December 22, 2024

தாம்பரம் நகரத்தின் முதல் மதிமுக செயலாளர் காலமானார்

image

தாம்பரம் மாநகரத்தின் மதிமுக தோற்றுவிக்கப்பட்ட போது முதல் நகர செயலாளராக இருந்தவர் பழனி (80). இந்நிலையில் வயது மூப்பு காரணமாக கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்காமல் இருந்து வந்த அவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று காலை 10 மணி அளவில் அவர் காலமானார். அவரின் உடலுக்கு தாம்பரத்தை சார்ந்த அனைத்துக் கட்சி பிரமுகர்களும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

News December 22, 2024

சாலை விபத்தில் இளைஞரின் தலை துண்டானது

image

கேரளாவைச் சார்ந்த விஷ்ணு (24) பம்மலை சார்ந்த கோகுல் (24) பெருங்குடியில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வேளச்சேரி சாலையில் மது போதையில் சென்றனர். பள்ளிக்கரணை அருகே வரும்போது சாலை தடுப்பின் மீது மோதியத்தில் தூக்கி வீசப்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கோகுல் தலை துண்டாகி உயிரிழந்தார். 

News December 22, 2024

கிறிஸ்துமஸை முன்னிட்டு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே

image

கிறிஸ்துமஸை முன்னிட்டு, தாம்பரம் – குமரி – கொச்சுவேலி இடைய சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தாம்பரத்திலிருந்து டிச.23 மற்றும் 30 ஆகிய தேதி நள்ளிரவு 12.35 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், மறுநாள் பிற்பகல் 12.15 மணிக்கு குமரி சென்றடையும். மறுமாா்க்கமாக, குமரியில் இருந்து டிச.25 மற்றும் ஜன.1 ஆகிய தேதிகளில் மாலை 4.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் அதிகாலை 4.20க்கு தாம்பரம் வந்தடையும்.

News December 22, 2024

இன்ஸ்டாகிராம் கணக்குகளை PUBLIC-ஆக வைக்காதீர்கள்

image

பொதுமக்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் செயலியின் கணக்குகளை PRIVATE-ஆக வைப்பது நல்லது என்றும், PUBLIC கணக்குகளில் உள்ள புகைப்படங்களை தவறாக சித்தரித்து மிரட்டி சிலர் பணம் பறிக்கும் சைபர் குற்றங்கள் அரங்கேறி வருவதாக செங்கல்பட்டு மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர். அவ்வாறு, சைபர் குற்றங்கள் நடந்தால், 1930 என்ற எண்ணு அல்லது www.cybercrime.gov in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News December 22, 2024

புத்தாண்டு: கடைபிடிக்க வேண்டிய விதிகள்

image

புத்தாண்டு வாழ்த்து சொல்லும் சாக்கில் சுற்றுலா வரும் பெண்களைக் கேலி, கிண்டல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாமல்லபுரம் ஓட்டல்களில் டிச.31ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி வழங்கக் கூடாது. இரவு 12 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது. கடற்கரை ரிசார்ட்களில் தங்கி உள்ளவர்கள் இரவு 12 மணிக்கு மேல் அறைகளை விட்டு வெளியே வரக்கூடாது. ஷேர் பண்ணுங்க

News December 21, 2024

மாடுகளை திருடிய இறைச்சிக் கடை உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது

image

கூடுவாஞ்சேரி, பெருமாள் நல்லூர், காயரம்பேடு போன்ற பகுதிகளில் தொடர்ந்து ஆடு, மாடுகள் திருடு போனதாக ஏராளமான புகார்கள் காவல் நிலையத்துக்கு வந்தது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது ஆப்பூரை சார்ந்த கலைவாணன்(32), காட்டாங்கொளத்துாரை சார்ந்த மாட்டு இறைச்சி கடை உரிமையாளர் சங்கர்(47) ஆகியோர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், இருவரும் செய்து செய்யப்பட்டனர். 

error: Content is protected !!