India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் வரும் 19ஆம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் ச.அருண் ராஜ் உத்தரவின் பெயரில், இந்த பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்தூர், புனித தோமையார் மலை, ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஊராட்சித் துறையில் பணியாற்றும் 8 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவிலம்பாக்கத்தில் உள்ள சோபா அடுக்குமாடி குடியிருப்பில், மது என்பவர் தங்கியுள்ளார். இவரது வீட்டில் வருமான வரித்துறையினர் இரு சோதனை நடத்தி வருகின்றனர். இவர், ஜியோ நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், வருமான வரி செலுத்துவதில் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இன்று காலை 7:20 மணிக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் 8 பேர் தீவிர சோதனை நடத்தி வருவதாகத் தெரிகிறது.
வடசென்னையில் இருந்து நிலக்கரி கழிவு சாம்பல் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி ஒன்று உத்திரமேரூர் தனியார் சிமெண்ட் நிறுவனத்திற்கு நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி மறைமலைநகர் அருகே மெல்ரோசபுரம் சாலை சந்திப்பில் நின்றிருந்த தனியார் வேன், கார்கள், ஆட்டோ, பைக் என 6 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என மாட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மற்றும் நேற்று முன்தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று மாலை ஓரளவு மழை சீரானதால், இன்று வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும். ஷேர் பண்ணுங்க
முடிச்சூர் ஊராட்சியில் ஒவ்வொரு ஆண்டும் மழையின் போது அமுதம் நகர், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும். இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையில் பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், ஊராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் ஆலோசனை மேற்கொண்டார். உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ஆட்சியர் அறிவுறுத்தினார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் (16.10.2024) இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களின் இலகுவான தொடர்புக்கு வெளியிடப்படுகிறது. https://x.com/SP_chengalpattu/status/1846528998740054263?t=sy7F8mAKmA41qgemUIuqTg&s=08 என்ற எக்ஸ் பக்கத்தில் விவரமாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
தாம்பரம் அருகே அகரம் தென் ஊராட்சி கஸ்பாபுரம் கிருஷ்ணா நகர் பகுதியில் மழைநீர் சாலையில் தேங்கி இருப்பதாகவும், ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதே இல்லை எனவும் அப்பகுதியைச் சார்ந்த குடியிருப்பு வாசி ஒருவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதனையடுத்து இன்று மாலை திடீரென கஸ்பாபுரத்தில்ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர் மழை நீரை அகற்ற உத்தரவிட்டார்.
சென்னை விமான நிலையத்தில் தொடர் மழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக, விமான பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்தது. இதன் காரணமாக, இன்று சென்னை விமான நிலையத்தில் 3 வருகை விமானங்கள், 3 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 6 விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன. மதுரை, சேலம், சீரடி போன்ற இடங்களுக்கு செல்லும் உள்நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஷேர் பண்ணுங்க
பருவமழை பெய்து வருவதால், சென்னை விமான நிலைய பயணிகளின் கோரிக்கையை ஏற்று, நேற்று இரவு முதல் மாநகர பேருந்துகள் சென்னை விமான நிலையத்திற்குள் உள்நாட்டு விமான நிலைய பகுதி, சர்வதேச விமான நிலைய பகுதி ஆகிய இடங்களுக்குள் வந்து விமான பயணிகளை ஏற்றி செல்கின்றன. இது, விமான பயணிகள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து இயக்கப்பட வேண்டும் என்ற விமான பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.