India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பர்மா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து தாயகம் திரும்பியோரின் கடன்களை நீக்கி ஆவணங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தாயகம் திரும்பிய சம்பந்தப்பட்ட பயனாளிகள், உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் கோட்ட அலுவலரை அணுகி பயன்பெறலாம் என ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் அண்ணா மிதிவண்டி போட்டி (04.01.2025) நேற்று காலை 7 மணியளவில் திருப்போரூர் கூட்ரோடு பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கப்பட்டது. இதில், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் ம.வரலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இப்போட்டியில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஊரப்பாக்கம் வனப்பகுதியில் ஏராளமான மான்கள் உள்ளன. இந்த வனத்தை ஒட்டி ஏராளமான குடியிருப்புகள் உள்ளதால், பிளாஸ்டிக் கழிவுகளை வனத்தை ஒட்டி கொட்டுகின்றனர். இதனால் வனத்திலிருந்து வெளியே வரும் மான்கள், பிளாஸ்டிக் கழிவுகளை உண்கின்றனர். இதனால் நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலை ஏற்படுகிறது. இதனை தடுக்க, பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தேவையற்ற தருணங்களில் வாகனங்களில் உள்ள ஹைபீம் விளக்குகளை (HIGH BEAM LIGHT) பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதனால், எதிரில் வரும் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் இதனை கடைபிடிக்கவும், விபத்து இல்லாமல் பயணம் மேற்கொள்ளவும், சாலை விதிகளை முறையாக கடைபிடித்து பயணம் மேற்கொள்ள வேண்டுமென செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். ஷேர் பண்ணுங்க
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி திட்டம் அளிக்கிறது. இதில், 18- 35 வயதுக்குட்பட்ட கிராமப்புற இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். இதற்கு கட்டணம் இல்லை. இன்று காலை 9.30 முதல் மாலை 3 வரை செங்கல்பட்டு மாவட்ட அலுவலகத்தில் உள்ள தரைத்தளம் ஜி.டி.பி. ஹாலில் நடைபெறும். இந்த திருவிழாவில் பங்கேற்கலாம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்காக சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு 4, 5,10, 11, 12, 13, 17, 18, 19 ஆகிய தேதிகளிலும், தாம்பரத்தில் இருந்து குமரிக்கு 13ஆம் தேதியும், ராமநாதபுரத்திற்கு 11,13,18 ஆகிய தேதிகளிலும், நெல்லைக்கு 13,20,27 ஆகிய தேதிகளிலும், நாகர்கோவிலுக்கு 12,19 ஆகிய தேதிகளிலும் புறப்படும். ஷேர் பண்ணுங்க
செங்கல்பட்டு ராமகிருஷ்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவன் லோகேஸ்வரன் தேசிய அளவில் டெல்லியில் நடக்கும் சைக்கிள் ஓட்டப்பந்தயத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பசித்தவருக்கு உணவு வழங்கும் குழு சார்பாக ரூ.2,500 மதிப்புள்ள ஹெல்மெட்டும் மற்றும் அவருடைய போக்குவரத்து செலவுக்காக ரூ.7,500 வழங்கப்பட்டது.
தாம்பரம் – திருச்சி இடையே சிறப்பு ரயில் ஜனவரி 4, 5, 10, 11, 12, 13, 17, 18, 19ஆம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு ஜன் சதாப்தி சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்படும். அதேபோல், மறு மார்க்கத்தில் திருச்சியில் இருந்து மாலை 5.35 மணிக்கு தாம்பரத்திற்கு இயக்கப்படும். இந்த ரயிலானது செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
செங்கல்பட்டு மாவட்ட கிராமப்புற இளைஞா்களுக்கு தீனதயாள் உபாத்யாய கிராமின் கௌசல்ய யோஜனா திட்டத்தின் கீழ், தொழில் சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்த பயிற்சி வழங்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். விருப்பமுள்ள இளைஞர்கள் நாளை (ஜன.4) காலை 9.30 – 3 மணி வரை மாவட்ட அலுவலகத்தின் தரை தளம் ஜிடிபி ஹாலில் நடைபெறும் இளைஞர் திறன் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 4ஆம் தேதி மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டி நடக்கிறது. விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெறும் இந்தப் போட்டி காலை 7 மணிக்கு, திருப்போரூர் கூட்டுச்சாலையில் தொடங்கப்பட உள்ளன. முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீரர் மற்றும் வீராங்கனையருக்கு தலா ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.