India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் ஆண்கள் 13,57,923. பெண்கள் 13,89,146 வாக்காளர்கள் ஆகும். இதர 481 என மொத்தம் 27,47,550 வாக்காளர்கள் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6,90,958 வாக்காளர்கள் இருக்கின்றனர். 18-19 வயதுடையோர் 37,749 வாக்காளர்கள் உள்ளனர். ஷேர் பண்ணுங்க
செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், சாலை விபத்துகள் அதிகமாக உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, “இருசக்கர வாகனத்தில் செல்லும் பெற்றோர்கள் தலைக்கவசம் அணிவதுடன், தங்கள் உடன் வரும் குழந்தைகளுக்கும் தலைக்கவசம் அணிவிக்க வேண்டும். குழந்தைகளை பாதுகாப்பது பெற்றோரின் கடமை” என்று அறிவுறுத்தியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (06.01.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில், சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 276 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிகபட்ச வாக்காளர்களை கொண்ட தொகுதியாக உள்ளது. இன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில் 3,45,184 ஆண் வாக்காளர்களும் , 3,45,645 பெண் வாக்காளர்களும், 129 இதர வாக்காளர்கள் என 6,90,958 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 18-19 வயதுடையோர் 8,096 பேர் உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட 7 சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் இன்று காலை வெளியிட்டார். இதில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உடன் இருந்தனர்.
சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கும் உதவி எண்களில் பெரும்பாலானவை பொய்யான உதவி எண்களாகும். மேலும், பொய்யான உதவி எண்கள் மூலம் ஏமாற்றி பணம் பறிக்கும் சைபர் குற்றங்கள் நடைபெறுகின்றன. எனவே மக்கள் இத்தகைய பொய்யான உதவி எண்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் சைபர் கிரைம் போலீசார் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், சிட்லபாக்கம் ஒன்றியக் கழக முன்னாள் கவுன்சிலரும், பரங்கிமலை ஒன்றியக் கழக முன்னாள் அவைத்தலைவருமான M. G. சோமசுந்தரம் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். சோமசுந்தரம் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தை கூறியுள்ளார்.
‘சிங்கார சென்னை ஸ்மார்ட் அட்டை திட்டம்’ மெட்ரோ ரயில் சேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று முதல் சென்னை மாநகர பேருந்துகளிலும் ஸ்மார்ட் அட்டை வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ என 3 பொது போக்குவரத்திலும் இந்த அட்டையை வைத்து பயணிக்க முடியும். ஸ்மார்ட் அட்டைகள் கோயம்பேடு, பிராட்வே பேருந்து நிலையங்களில் விநியோகிக்கப்பட உள்ளன.
முடிச்சூர் பகுதியை சேர்ந்த சூரிய பிரகாஷ் (24), கிளாம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீராம் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர் வீடுகளுக்கு சென்று, பணம் வசூல் செய்து அதை அலுவலகத்தில் செலுத்தும் பணியை செய்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக வசூல் செய்த பணம் 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை அலுவலகத்தில் செலுத்தாமல் பணத்துடன் தலைமறைவாகி விட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீஸார் சூரிய பிரகாஷை கைது செய்தனர்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் New Foot Over Bridge பணிகள் நடைபெற இருப்பதால், இன்று (ஜன.5) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் ரயில்கள் பல்லாவரம் வரையும், அதேபோல் செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் காலை 11 மணி முதல் மாலை 4 வரை செங்கல்பட்டிலிருந்து கூடுவாஞ்சேரி வரையும் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.