Chengalpattu

News November 5, 2024

கால்நடை கணக்கெடுப்பு பணி தொடக்கம்

image

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 21ஆவது கால்நடை கணக்கெடுப்பு பணியை கலெக்டர் அருண்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார். இந்தப் பணியில், தன்னார்வலர்கள் 113 பேர் மற்றும் கால்நடைத்துறை பணியாளர்கள் 47 பேர் என மொத்தம் 160 பேர் மற்றும் மேற்பார்வையாளர்களாக 34 டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தற்போது கணக்கெடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

News November 5, 2024

பரனூர் சுங்கச்சாவடி வழியாக 35,585 கார்கள் வருகை

image

தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர் சென்றவர்கள் நேற்று முந்தினம் திரும்பினர். இதனை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சுமார் 1000க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடந்த 2 நாட்களில் பரனூர் சுங்கச்சாவடி வழியாக 35,585 கார்கள், 1,675 பேருந்துகள், 3,604 லாரிகள் மற்றும் பிற வாகனங்கள் சென்னைக்குள் வந்துள்ளன என்று தாம்பரம் காவல் ஆணையரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 5, 2024

தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்தது. இதுதொடர்பாக, ரயில்வே காவல் ஆய்வாளர், இருப்பு பாதை காவல் ஆய்வாளர் மற்றும் தாம்பரம் காவல் ஆய்வாளர்கள் தலைமையில், தாம்பரம் ரயில் நிலையம் முழுவதும் சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து மிரட்டல் விடுத்த நபர் குறித்த விசாரிக்கின்றனர்.

News November 5, 2024

எக்ஸ்பிரஸ் ரயில் மோதி கணவன், மனைவி பலி

image

காட்டாங்கொளத்தூர், நின்னகரை ரயில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் வேலன் (82). இவரது மனைவி பசும்பொன் (71). இருவருக்கும் சரியாக காது கேட்காது. இந்நிலையில், நேற்று மாலை மறைமலைநகர் அருகே தண்டவாளத்தை கடந்தபோது பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த விபத்து தொடர்பாக, தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News November 5, 2024

மகளிர் சுயஉதவி குழு உற்பத்தி பொருள் கண்காட்சி

image

மதுராந்தகத்தில் உள்ள ‘கற்பக விநாயகர் பொறியியல் கல்லூரியில்’ மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள் கண்காட்சி இன்று (நவ.5) முதல் 3 நாட்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யும் அப்பளம், ஊறுகாய், சானிடரி நாப்கின், சணல்பை, சுடிதார் போன்றவற்றை வாங்கி பயன்பெறுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

News November 5, 2024

விரைவில் வரும் ஆம்னி பேருந்து நிலையம்

image

தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியில் ரூ.42 கோடி செலவில் புதிதாக ஆம்னி பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அது, இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்துள்ளார். இங்கு 120 பேருந்துகள் ஒரே நேரத்தில் நின்று செல்லும் வகையில் பல்வேறு நவீன வசதிகளும் இடம்பெற்றுள்ளன என்றும், இது திறக்கப்பட்டபின் கிளாம்பாக்கத்தில் சற்று நெரிசல் குறையும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

News November 5, 2024

சாலையோர பள்ளத்தில் விழுந்து குழந்தை பலி

image

திருப்போரூரில், பேரூராட்சி சார்பில் குடிநீருக்காக பள்ளம் தோண்டப்பட்டது. பணி முடிந்து பள்ளத்தை மூடவில்லை. இந்நிலையில், ஆமூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (30) தனது மகன் மோகித்தை (2) அழைத்துக் கொண்டு பைக்கில் திருப்போரூர் நேற்று சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த மோகித், எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

News November 5, 2024

2ஆவது நாளாக தொடரும் போக்குவரத்து நெரிசல்

image

தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊா்களுக்கு சென்றவா்கள், ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டு நேற்று காலை சென்னைக்கு வரத்தொடங்கினா். ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோா் சென்னைக்குள் வந்ததால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பரனூா் முதல் வீராபுரம் வரை சுமாா் 2 கி.மீ. தூரத்துக்கு 2ஆவது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சென்னை திக்கு முக்காடி வருகிறது.

News November 5, 2024

அமைச்சர் தலைமையில் குறை கேட்பு கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (நவ.5) மாலை 3 மணியளவில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் குறை கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. அமைச்சர் அன்பரசன் தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்கள் முன்னிலையிலும் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை மனுக்கள் மூலம் அளிக்கலாம்.

News November 5, 2024

மமக சார்பில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்க இடம் ஆய்வு

image

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பம்மல், அனகாபுத்தூர் பகுதி மக்கள் பயன்படும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான விழா விரைவில் நடைபெற இருக்கிறது. விழா நடத்துவது தொடர்பாக மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் எம்.யாகூப் தலைமையில் பம்மல் பகுதியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆம்புலன்ஸ் தொடங்கப்படவுள்ள இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.