Chengalpattu

News January 9, 2025

திருவிடந்தையில் 20 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச பலூன் திருவிழா

image

கிழக்கு கடற்கரை சாலை கோவளம் அடுத்த திருவிடந்தை பகுதியில் 20க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் சர்வதேச பலூன் திருவிழா நாளை (ஜன.10) கோலாகலமாக தொடங்க உள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் குளோபல் மீடியா பாக்ஸ் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தொடர்ந்து 10வது ஆண்டாக நடைபெறும் இவ்விழா ஜன.10 – 12 ஆகிய 3 நாட்கள் நடைபெறும். இதை சிறப்பாக நடத்த அமைச்சர் ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

News January 9, 2025

தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் பணியிடை மாற்றம்

image

தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலராக சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலர் யுவராஜ் என்பவர் கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையராக உதவி செயலராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆர்டிஓ உதவியாளராக இருந்த குமரகுரு கூடுதல் பொறுப்பாக ஆர்டிஓ பணிகளை கவனிப்பார் என உத்தரவிடப்பட்டுள்ளது.

News January 9, 2025

ஏரியில் பதுங்கிய திருடர்கள்; ட்ரோன் மூலம் கண்டுபிடிப்பு

image

வேடவாக்கம், செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (62). இவர், நேற்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டு திரும்புகையில், வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே சென்று திருட முயன்றபோது சத்தம் கேட்டதால், மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவை திறந்து ஓடி, அங்கிருந்த ஏரியில் பதுங்கி உள்ளனர். பின், ட்ரோன் உதவியுடன், திருடர்களை பிடித்து மதுராந்தகம் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

News January 8, 2025

2026இல் தாம்பரம் மாநகராட்சி விரிவாக்கம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்தவுடன், தாம்பரம் மாநகராட்சியில் வரும் 2026இல் இணைக்கப்படும். பகுதிகள் விபரம்: ஊரப்பாக்கம், வண்டலூர், திருவஞ்சேரி, அகரம்தென், மதுரப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், சித்தாலப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், மேடவாக்கம், நன்மங்கலம், கோவிலம்பாக்கம், திரிசூலம், முடிச்சூர், கவுல் பஜார், பொழிச்சலூர், மூவரசம்பட்டு, வேங்கடமங்கலம் ஆகும்.

News January 8, 2025

சாதனை படைத்த பெண்ணுக்கு அமைச்சர்கள் பாராட்டு

image

சிகரம் தொட்ட பெண்முத்தமிழ்செல்வி தனது 6ஆவது சாதனை பயணமாக, அண்டார்டிகா கண்டம் வின்சன் மலை சிகரத்தை ஏறி சாதனை படைத்து நேற்று முன்தினம் (ஜன.6) தாயகம் திரும்பினார். அவரை, அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சிவ.வீ.மெய்யநாதன், தங்கம் தென்னரசு ஆகியோர் இன்று நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினர். இந்த சந்திப்பின்போது, மாவட்ட குழுத் தலைவர் மனோகரன், கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவர் கார்த்திக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News January 8, 2025

கார் மீது லாரி மோதி விபத்து: இளைஞர் கவலைக்கிடம்

image

புதுச்சேரியில் இருந்து சென்னை விமான நிலையம் நோக்கி, கார் ஒன்று இன்று அதிகாலை சென்று கொண்டிருக்கிறது.‌ காரை லட்சுமி காந்தன் என்ற இளைஞர் ஓட்டி சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கார் மீது லாரி மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரை ஓட்டி வந்த இளைஞர் காருக்குள் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். அவரை மீட்ட தீயணைப்பு துறையினர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

News January 8, 2025

13ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். வரும் ஜன.13ஆம் தேதி வரை காலை 9 முதல் மாலை 6 மணி வரை விநியோகம் செய்யப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் கடை விற்பனை முனைய இயந்திரத்தின் பயோமெட்ரிக் முறை மூலம் வழங்கப்படும். பொங்கல் பரிசு வழங்கப்பட்ட விவரம் குடும்ப அட்டைதாரர்களின் கைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

News January 7, 2025

Way2Newsல் நிருபராக விருப்பமா?

image

தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான Way2News Appல் திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர் உள்ளிட்ட தாலுகாக்களுக்கு செய்தியாளராக விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட லிங்கில் <>உங்களை பற்றிய தகவல்களை<<>> பதிவு செய்யவும், நீங்கள் பகுதி நேர வருவாய் ஈட்ட இது ஒரு அறிய வாய்ப்பு, மேலும் விவரங்களுக்கு +91 8466022122 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.

News January 7, 2025

பொங்கல் தொகுப்பு குறித்து புகார் செய்ய எண்கள் அறிவிப்பு

image

மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் – 9498341045, வட்ட வழங்கல் அலுவலர் செங்கல்பட்டு – 9941183641, மதுராந்தகம் – 7397630313,திருக்கழுக்குன்றம் – 9865984506, திருப்போரூர் – 7200453440, வண்டலூர் – 9629749023, செய்யூர் – 9788264833 ஆகிய செல்போன் எண்கள் மூலம் பொங்கல் தொகுப்பு தொடர்பான புகார்கள் இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

News January 7, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த நபர் பலி

image

கடந்த 3ஆம் தேதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்லாவரம் அடுத்த திரிசூலம் வைகை தெருவைச் சேர்ந்த பாபு என்பவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். 70% தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தச் சூழலில், சிகிச்சை பலனின்றி பாபு நேற்று (ஜன.6) உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த செங்கல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!