Chengalpattu

News October 24, 2024

தமிழரின் தொன்மை நாகரீகம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டி

image

செங்கல்பட்டில் மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு பயிலும் 62 மாணவ, மாணவிகள் “சிறகை விரிக்கலாம் வாருங்கள்–100” என்ற நிகழ்ச்சியில், தமிழரின் தொன்மை நாகரீகம் என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ரொக்க பரிசும், பாராட்டு சான்றிதழ்களையும், சார் ஆட்சியர் வெ.நாராயண சர்மா இன்று (24.10.2024) வழங்கி பாராட்டினார்.

News October 24, 2024

தாம்பரம் – ராமநாதபுரம் சிறப்பு ரயில் நவ.30 வரை நீட்டிப்பு

image

தாம்பரம்-ராமநாதபுரம் இடையே வாரம் மூன்று முறை இயக்கப்படும் சிறப்பு ரயில் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாம்பரம்- ராமநாதபுரம்-தாம்பரம் இடையே வாரம் மூன்று முறை சிறப்பு ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரயில் சேவை வருகிற 31ஆம் தேதி முடிவடைய இருந்த நிலையில், தற்போது நீட்டிக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

News October 24, 2024

பண விதைகள் நடும் பணி: செங்கல்பட்டு 3ஆம் இடம்

image

தன்னார்வலர்கள் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் பனை விதை நடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று அறிக்கைப்படி, 1,068 தன்னார்வலர்கள் பங்கேற்புடன் 4,08,636 பனை விதைகள் நட்டு விழுப்புரம் முதல் இடத்தையும், 3,094 தன்னார்வலர்களுடன் 3,77,581 பனை விதைகள் நட்டு நாமக்கல் 2ஆம் இடமும், 828 தன்னார்வலர்களுடன் 32,713 பனை விதைகள் நட்டு செங்கல்பட்டு 3ஆம் இடமும் பிடித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 24, 2024

செங்கல்பட்டில் வரும் 26ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

image

தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், செங்கல்பட்டு பகுதியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி, மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூரில் உள்ள லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 24, 2024

விவசாயிகள் குறைதீர் முகாம்: தவறாமல் கலந்து கொள்ளுங்கள்

image

செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில், நாளை காலை 10:30 மணி அளவில் விவசாயிகள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் ச.அருண் ராஜ் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் பங்கேற்று விவசாயம் சார்ந்த தங்கள் பிரச்னைகளை ஆட்சியரிடம் மனுவாக அளித்து தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News October 24, 2024

தீபாவளியை முன்னிட்டு விமான கட்டண சலுகை

image

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை – பெங்களூர் உள்ளிட்ட, சில உள்நாட்டு வழித்தடங்களில், சலுகை பயண கட்டணங்களை அறிவித்துள்ளது. அதன்படி சென்னை – பெங்களூர், கொச்சி – பெங்களூர், கவுகாத்தி – அகர்தலா, விஜயவாடா – ஹைதராபாத் உள்ளிட்ட சில வழித்தடங்களில், இந்த சலுகை கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஷேர் பண்ணுங்க

News October 24, 2024

சீர்மரபினருக்கு இன்று முகாம்: தவறவிடாதீர்கள்

image

செங்கல்பட்டு மாவட்டம், சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு, விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. இந்த நலத்திட்ட உதவிகள் பெற, சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்கள் செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று முற்பகல் 11 முதல் மாலை 5 மணி வரை நடக்கும் முகாமை பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் அருண்ராஜ் அறிவித்தார். ஷேர் பண்ணுங்க

News October 24, 2024

ஐ.டி.ஐ.யில் உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி

image

புனித தோமையார் மலை அருகே உள்ள பெரும்பாக்கம் ஐ.டி.ஐ.யில், கணிணி, ரோபோட்டிக், டிஜிட்டல் உற்பத்தி, மெக்கானிக் போன்ற படிப்புகளுக்கு மாணவர் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. இதில், 8ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவர்கள் பயிற்சியில் சேர வரும் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 99629 86696, 75984 21700 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News October 24, 2024

கல்லூரி வாலிபால் போட்டியில் இரட்டை தங்கம்

image

தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்கான மாநில போட்டிகளில், செங்கல்பட்டு கல்லூரி மாணவர், மாணவிகள் வாலிபாலில் இரட்டை தங்கம் வென்றனர். கடந்த அக்.4இல் தொடங்கிய முதல்வர் கோப்பை மாநில போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற கல்லூரி வாலிபால் பிரிவில் மாணவர், மாணவிகள் என பிரிவுகளிலும் செங்கல்பட்டு இரட்டை தங்கம் வென்றது. இதனால், செங்கல்பட்டு 29 தங்கம், 25 வெள்ளி, 29 வெண்கலம் வென்றுள்ளது.

News October 24, 2024

ஜி.எஸ்.டி. சாலையில் வாகனம் நிறுத்தினால் நடவடிக்கை

image

தாம்பரம், குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்படி வாகனங்கள் நிறுத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கடைக்காரர்களுக்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பல்லாவரம் முதல் பெருங்களத்தூர் வரை ஜி.எஸ்.டி. சாலையில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள்.

error: Content is protected !!