India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடை கொண்டு செல்லவும். வங்கக்கடலில் வரும் 7ம் தேதி காற்றழுத்த தாழ்வு உருவாகிறது. இதனால் தமிழகத்தில் 9ம் தேதி வரை 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், டெங்கு காய்ச்சல் தொற்றால் அனுமதிக்கப்பட்ட செய்யூர் தேவராஜபுரம் பகுதியைச் சேர்ந்த யாத்திகா (6) என்ற சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். ஊராட்சி நிர்வாகம் தூய்மை பணியை செய்யத் தவறியதால், இதுபோன்ற சோகச் சம்பவம் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளிடம் குறை கேட்பு கூட்டத்தில் அமைச்சர் தாமு அன்பரசன் பங்கேற்று மனுக்களை பெற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, சார் ஆட்சியர் நாராயண சர்மா, கூடுதல் ஆட்சியர் அனாமிகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செங்கல்பட்டைச் சேர்ந்த பிரதீப் (25) மற்றும் பிரகாஷ் (23) ஆகியோர் இன்று மாலை வேலையை முடித்துவிட்டு சென்னையில் இருந்து இருவரும் பைக்கில் வீட்டிற்கு சென்றனர். தாம்பரம் டி.பி மருத்துவமனை அருகே குரோம்பேட்டையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற அரசு பேருந்து, பைக் மீது மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் பிரதீப் மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் அவர் தலை நசுங்கி உயிரிழந்தார்.
அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு, கால்நடை துறை அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வரும் முரளி என்பவர் பாலியல் சீண்டல் செய்துள்ளார். சிறுமி அவர்களது பெற்றோர்களிடம் தெரிவித்ததை அடுத்து, அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர்கள் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் முரளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 21ஆவது கால்நடை கணக்கெடுப்பு பணியை கலெக்டர் அருண்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார். இந்தப் பணியில், தன்னார்வலர்கள் 113 பேர் மற்றும் கால்நடைத்துறை பணியாளர்கள் 47 பேர் என மொத்தம் 160 பேர் மற்றும் மேற்பார்வையாளர்களாக 34 டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தற்போது கணக்கெடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர் சென்றவர்கள் நேற்று முந்தினம் திரும்பினர். இதனை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சுமார் 1000க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடந்த 2 நாட்களில் பரனூர் சுங்கச்சாவடி வழியாக 35,585 கார்கள், 1,675 பேருந்துகள், 3,604 லாரிகள் மற்றும் பிற வாகனங்கள் சென்னைக்குள் வந்துள்ளன என்று தாம்பரம் காவல் ஆணையரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்தது. இதுதொடர்பாக, ரயில்வே காவல் ஆய்வாளர், இருப்பு பாதை காவல் ஆய்வாளர் மற்றும் தாம்பரம் காவல் ஆய்வாளர்கள் தலைமையில், தாம்பரம் ரயில் நிலையம் முழுவதும் சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து மிரட்டல் விடுத்த நபர் குறித்த விசாரிக்கின்றனர்.
காட்டாங்கொளத்தூர், நின்னகரை ரயில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் வேலன் (82). இவரது மனைவி பசும்பொன் (71). இருவருக்கும் சரியாக காது கேட்காது. இந்நிலையில், நேற்று மாலை மறைமலைநகர் அருகே தண்டவாளத்தை கடந்தபோது பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த விபத்து தொடர்பாக, தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மதுராந்தகத்தில் உள்ள ‘கற்பக விநாயகர் பொறியியல் கல்லூரியில்’ மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள் கண்காட்சி இன்று (நவ.5) முதல் 3 நாட்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யும் அப்பளம், ஊறுகாய், சானிடரி நாப்கின், சணல்பை, சுடிதார் போன்றவற்றை வாங்கி பயன்பெறுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.