Chengalpattu

News November 19, 2024

மகளிர் சுயஉதவிக்குழு கண்காட்சி: அமைச்சர் பார்வை

image

செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில், 71ஆவது மாவட்ட அளவிலான அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில், கூட்டுறவுத் துறையின் சார்பாக மகளிர் சுய உதவிக் குழுவினரால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் விற்பனை கண்காட்சியினை அமைச்சர் பார்வையிட்டு, சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டு கேடயங்கள் மற்றும் 1,678 பயனாளிகளுக்கு ரூ.35.71 கோடி மதிப்பீட்டில் கடன் உதவிகளை வழங்கினார்.

News November 19, 2024

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இலவசம்

image

இந்தியாவில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 19ஆ ம் முதல் 25ஆம் வரையில் உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், உலக பாரம்பரிய வாரத்தின் முதல் நாளான இன்று (நவ.19) மாமல்லபுரத்தில், தொல்லியல் துறையின் பராமரிப்பில் அமைந்துள்ள பல்லவ மன்னர்களின் சிற்பக் கலையை உலகுக்கு பறைசாற்றும் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு, கிருஷ்ண மண்டபம் மற்றும் வெண்ணைய் உருண்டை பாறை உள்ளிட்டவை இலவசமாக காணலாம்.

News November 19, 2024

ஆபாசப்படம் வெளியிட்ட கணவன்: கைது செய்ய கோரி தர்ணா

image

மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்ட கணவரை கைது செய்ய வலியுறுத்தி, பல்லாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை நேற்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், பல்லாவரம் உதவி ஆணையர் வெங்கட் குமார், மாதர் சங்கத்திடம் பேச்சுவார்த்தையிட்டு ஈடுபட்டு, ஓரிரு தினங்களில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என உறுதி அளித்ததையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

News November 19, 2024

பிறந்த அடுத்த நொடியே கொன்ற கொடூர தாய்

image

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஷகீனாபேகம் (22), ஒரகடம் பகுதியில் தங்கி தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவர், தனது காதலன் சுமனை அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளார். இதனால் அவர் கர்ப்பமானார். காதலன் சுமன் தலைமறைவாகிவிட்ட நிலையில், கர்ப்பமான ஷகீனாபேகத்திற்கு நேற்று குழந்தை பிறந்தது. இதையடுத்து, பிறந்த மறு நிமிடமே குளத்தில் வீசி குழந்தையை கொன்றுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News November 19, 2024

நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகள் 14 பயனாளிகளுக்கு தலா ரூ.1,995/– மதிப்புடைய பிரெய்லி கைகடிகாரம், 3 பயனாளிகளுக்கு தலா ரூ.12,500/– மதிப்பீட்டில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட திறன்பேசிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 7 பேருக்கு சலவைப் பெட்டி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் பயனாளிகளுக்கு வழங்கினார்.

News November 19, 2024

வேடந்தாங்கலில் தெலங்கானா வனத்துறையினருக்கு பயிற்சி

image

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், தெலங்கான மாநிலத்தைச் சேர்ந்த 40 வனத்துறையினருக்காக நேற்று சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. இவர்களுக்கு வனத்துறை அதிகாரி கனிமொழி, சரணாலயத்தின் கட்டமைப்புகள், பறவைகளின் வாழ்வியல், உணவு தேடும் முறை மற்றும் ஏரியின் கரைகளில் அமைக்கப்பட்டுள்ள மரங்கள் மற்றும் அவற்றின் மூலம் பறவைகள் பெறும் பயன்கள் குறித்து விளக்கினார்.

News November 19, 2024

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 280 மனுக்கள் பெறப்பட்டன

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பட்டா, முதியோர் உதவித்தொகை, ஓய்வூதியம், சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்டவைகள் தொடர்பாக 280 மனுக்கள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

News November 18, 2024

100 நாள் வேலை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

image

காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு முன், இன்று ஒழலூர் கிராம மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட 100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்கிட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். முன்னதாக 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

News November 18, 2024

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவருக்கு அமைச்சர் அஞ்சலி 

image

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் மா.சா.முனுசாமி மறைவிற்கு மதுராந்தகத்தில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ள உடலுக்கு அமைச்சர் அன்பரசன் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். மறைந்த மா.சா.முனுசாமி தனது இறப்பிற்கு பிறகு தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அதன்படி அவருடைய உடல் தானமாக வழங்கப்பட உள்ளது.

News November 18, 2024

வங்கியில் கடன் உதவி பெற ஆட்சியர் அழைப்பு

image

தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும், தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி கிளைகள் உள்ளது. இந்த வங்கிகளில், குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், அசையா சொத்து அடமானத்தின் பெயரில் கடன் வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9842660649 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என  மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்தார்.