Ariyalur

News September 7, 2024

நான் முதல்வன் உயர்வுக்கு படி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

image

அரியலூரில் நான் முதல்வன் “உயர்வுக்குப் படி திட்டம்” தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. 12 ஆம் வகுப்பு தோல்வியடைந்த/தேர்விற்கு /பள்ளிக்குவராத/தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்காக நான் முதல்வன் உயர்வுக்குபடி என்ற திட்ட சிறப்புமுகாம் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.

News September 7, 2024

அரியலூர் ஐ.டி.ஐ.,களில் சேர அவகாசம் நீட்டிப்பு

image

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி ஒரு அறிக்கை வெளி யிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:- 2024-ம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நேரடி சேர்க்கை நடைபெறும் கால அவகாசம் வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும்.

News September 7, 2024

அரியலூர்- ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது இதில் பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளில் நடைபெறுகிறது இதன் ஒட்டி செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது

News September 7, 2024

அரியலூர் ஆட்சியர் வாழ்த்து

image

அரியலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய பள்ளி ஆசிரியர்கள் விரிவுரையாளர்கள் முதுநிலை விரிவுரையாளர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர் தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற ஆசிரியர்களை வாழ்த்தினார்.

News September 6, 2024

அரியலூர் ஆட்சியர் தகவல்

image

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள். தேவையான உரங்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. டி.ஏ.பி உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சூப்பர் பாஸ்பேட் உரத்தினை பயன்படுத்தும் போது இதில் உள்ள சல்பர் மற்றும் கால்சியம் ஆகியவை பயிர்களுக்கு தேவையான கூடுதல் சத்துக்கள் கிடைக்கும் என ஆட்சியர் தெரிவித்தார்.

News September 6, 2024

கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி புதிய கிளை அமைச்சர் திறந்து வைத்தார்

image

ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் கடைவீதியில் கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தின் புதிய கிளையினை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார். இதில் வங்கி தலைவர் கல்யாண சுந்தரம், துணைத் தலைவர் ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், வங்கி இயக்குனர் வேலப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News September 6, 2024

அரியலூர் ராணுவ கல்லூரியில் சேர வாய்ப்பு

image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இராணுவ கல்லூரியில் 8ஆம் வகுப்பு பயில ஐீலை – 2025 மாதப் பருவத்தில் சேருவதற்கான தேர்வு வருகிற 01 டிசம்பர் 2024 அன்று நடைபெறவுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் என்ற இணையதளத்தில் www.rimc.gov.in பதிவிறக்கம் செய்து அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் வரும் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News September 6, 2024

அரியலூரில் டிஏபி உரத்திற்கு மாற்றாக புதிய உரம்

image

அரியலூர் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. டி.ஏ.பி.உரத்திற்கு பதிலாக சூப்பர் பாஸ்பேட் உரங்கள் ஆகியவை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள சல்பர் மற்றும் கால்சியம் ஆகியவை பயிர்களுக்கு கூடுதல் சத்துக்கள் கொடுத்து அதிக மகசூல் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே விவசாயிகள் சூப்பர் பாஸ்பேட் உரங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ஆட்சியர் கூறினார்.

News September 6, 2024

புதிய வழித்தட பேருந்து சேவை: அமைச்சர் தொடங்கிவைப்பு

image

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம், தென்னூர் முதல் வேளாங்கண்ணி வரை செல்லும் புதிய வழித்தட பேருந்து வசதியினை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் பேருந்தில் ஏறி சிறிது தூரம் பயணம் செய்தார். இதில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News September 6, 2024

அரியலூரில் UPSC தேர்வுக்கு சிறப்பு பயிற்சி

image

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் UPSC தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது. இத்தேர்வு எழுத நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணவர்களுக்கு முதற்கட்டமாக பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சிக்கு விருப்பமுள்ள மாணவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்தார.

error: Content is protected !!