Ariyalur

News July 23, 2024

அரியலூரில் திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

image

அரியலூர் அண்ணா சிலை அருகில் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் தலைமையில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் ரேசன் கடைகளில் பருப்பு பாமாயில் நிறுத்த முயற்சிக்காமல் அனைத்து பொருட்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்

News July 23, 2024

அரசு கலைக்கல்லூரியில் இறுதிக்கட்ட கலந்தாய்வு

image

அரியலூர் அரசு கலைக் கல்லூரியின் சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்ட 13 துறைகளில் இறுதிக்கட்ட கலந்தாய்வு இன்று(23-7-2024) முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாணவர்கள் தாங்கள் விண்ணப்பம் செய்திருந்தாலும் செய்யாமல் இருந்தாலும் நேரடியாக கலந்தாய்வில் கலந்துகொண்டு தங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தங்களது விருப்ப பாடத்தை தேர்வு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News July 22, 2024

ஆகஸ்ட்-2 அன்று அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

image

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் ஆலயத்தில், ஆடி திருவாதிரை விழாவினை முன்னிட்டு வருகிற 02.08.2024 (வெள்ளிகிழமை) அன்று அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை எனவும், அதனை ஈடுசெய்யும் பொருட்டு 17.08.2024 அன்று முழுவேலை நாள் என கலெக்டர் இரத்தினசாமி அறிவித்துள்ளார்

News July 22, 2024

பொதுமக்களிடம் மனுக்கள் பெற்ற புதிய கலெக்டர்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைப்பெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் 457 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்று கொண்டார். இம்மனுக்கள் மீது சம்மந்தபட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தபட்டது.

News July 22, 2024

’அரியலூர்’ பெயர் எப்படி வந்தது தெரியுமா?

image

‘ஹரியலூர்’ என்பதே காலப்போக்கில் ‘அரியலூர்’ என மாறியதாக கூறப்படுகிறது. அரி+இல்+ஊர் = அரியலூர்; அரி-விஷ்ணு, இல்-உறைவிடம், ஊர்-பகுதி; பகவான் விஷ்ணு உறைவிடம் கொண்ட பகுதி என்பது இதன் பொருள். விஷ்ணு கோயில்கள் அதிகமாக உள்ளதாலும் இப்பெயர் வந்திருக்கலாம். மேலும், ‘அரியல்’ என்ற ஒருவகை பானத்தாலும் இப்பெயர் என சொல்லப்படுகிறது. இதுபோல உங்க ஊர பற்றி உங்களுக்கு வேற பெயர்க்காரணம் தெரியுமா. C0MMENT பண்ணுங்க.

News July 21, 2024

ஆட்சியருக்கு அமைச்சர் வாழ்த்து

image

அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ரத்தினசாமி, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரை அரியலூர் முகாம் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அமைச்சருக்கு ஆட்சியர் சால்வை அணிவித்து நினைவு பரிசாக புத்தகத்தை வழங்கினார்.

News July 21, 2024

அரியலூர் மாவட்டத்தில் 7.5 செ.மீ மழை

image

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து, நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று வரை அதிகபட்சமாக 7.5 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News July 21, 2024

அரியலூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்

image

தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை கண்டித்து வருகின்ற 23ஆம் தேதி காலை 9 மணிக்கு அரியலூர் மாவட்ட அதிமுக சார்பாக அரியலூர் பழைய பேருந்து நிலையம் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் அரியலூர் மாவட்ட கழக செயலாளர், தமிழ்நாடு முன்னாள் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

News July 21, 2024

நாம் தமிழர் போராட்டம் அறிவிப்பு

image

தமிழகத்தில் நிலவும் சட்ட, ஒழுங்கு பிரச்சனையை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் அரியலூரில் இன்று நடைபெறுகிறது. அண்ணா சிலை அருகில் போராட்டம் நடைபெறுகிறது.

News July 20, 2024

அரியலூர் அருகே 100 நாள் வேலை திட்டம் ஆட்சியர் ஆய்வு 

image

அரியலூர் வெங்கடகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் அப்பகுதியில் உள்ள ஏரி தூர்வாரும் பணியில் ஏராளமான பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியாளர்கள் எண்ணிக்கை, பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும்  வழங்கப்படும் முறை ஆகியவை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

error: Content is protected !!