Ariyalur

News August 2, 2024

அரியலூரில் ஆடி பதினெட்டை முன்னிட்டு முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி காவிரி நீர் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே நாளை நடைபெறும் ஆடிபெருக்கு திருவிழாவின்போது கொள்ளிடம் ஆற்றிற்கு செல்லும் பொதுமக்கள் போலீசார் மற்றும் வருவாய் துறையினரால் அனுமதிக்கப்பட்ட பாதுகாப்பான இடங்களில் மட்டும் நீராட வேண்டும். உடன் அழைத்துச் செல்லும் குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News August 2, 2024

வேளாண் பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் மானியம்

image

அரியலூர் மாவட்ட வேளாண் பட்டதாரிகளுக்கு, மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் மானியத்துடன், தொழில் தொடங்க நிதியுதவி வழங்கப்படுமென ஆட்சியர் ரத்தினசாமி நேற்று தெரிவித்துள்ளார். இத்திட்டத்தில் 21-40 வயதுள்ள, வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டதாரிகள் கணினி திறன் பெற்றிருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டும் நிதி உதவி பெறப்படும் என தெரிவித்தார்.

News August 2, 2024

ஆன்லைனில் ரூ.54 லட்சம் மோசடி

image

அரியலூர் மாவட்டம் இலுப்பையூரை சேர்ந்த கருணாமூர்த்தி என்பவரிடம் ஆன்லைனில் ரூ.54 லட்சம் மோசடி என புகார் வந்துள்ளது. முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் எனக் கூறி சிறுக சிறுக ரூ.54 லட்சம் வரை கொடுத்து கருணாமூர்த்தி ஏமாந்துள்ளார். பின்னர், கருணாமூர்த்தி அளித்த புகாரின் பேரில் அரியலூர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News August 2, 2024

அரியலூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை

image

ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலய வளாகத்தில் ஆடி திருவாதிரை யான இன்று சோழப் பேரரசில் மாமன்னனாக விளங்கிய ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது இதனை ஒட்டி மாவட்டத்திலுள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்

News August 2, 2024

அரியலூர் ஆட்சியர் அறிவுரை

image

அரியலூர் மாவட்டத்தில் தற்போது 506 மெ.டன் சூப்பர் பாஸ்பேட் உரம் இருப்பில் உள்ளது. டிஏபி உரம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் தட்டுப்பாடு விலை உயர்வு காரணமாக டிஏபி உரம் கிடைப்பது தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறலாம். இந்த உரத்தில் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான மணிச்சத்து 16 சதவீதம் உள்ளது என ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News August 1, 2024

அரியலூரில் அரசு சிமெண்ட் ஆலை ஆய்வு

image

அரியலூர் அருகே கயர்லாபாத் கிராமத்தில் அமைந்துள்ள அரசு சிமெண்ட் ஆலையை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண்ராய், மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆலையின் செயல்பாடுகள், ஆலையின் உற்பத்தி திறன், பணியாளர்கள், பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

News August 1, 2024

அரியலூரில் வெள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு

image

அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடத்தில் நீர்வரத்து தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண்ராய் ஆய்வு மேற்கொண்டார். பல்வேறு துறைகளில் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் உயிர்காக்கும் உபகரணங்கள், மணல் தயார் நிலையில் உள்ள விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News August 1, 2024

அரியலூர்- காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

image

அரியலூர் அண்ணா சிலை அருகில் காங்கிரஸ் கட்சியினர் மாவட்டத் தலைவர் சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மக்களவையில் சாதி ரீதியாக பேசிய பாஜக எம்.பி அனுராக் தாகூர் மற்றும் அவரை ஊக்கப்படுத்தும் விதமாக அந்த பதிவை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பிரதமர் மோடியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News August 1, 2024

மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கு ஆடி திருவாதிரை விழா

image

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கு ஆடி திருவாதிரை விழா, தமிழக அரசால் நாளை விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து உள்ளூர் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

News August 1, 2024

தமிழ்ச் செம்மல் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

image

2024-ம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்களிடமிருந்து கடந்த 13/07/24 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்தவகையில், அரியலூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் தமிழ் ஆர்வலர்கள், தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க வரும் 8-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!