India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கம் பராமரிப்பு வழிமுறைகளை குறித்து அரியலூர் மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறையும், தனியார் வேளாண் இயந்திரங்கள் மற்றும் விற்பனை நிறுவனங்களும் இணைந்து வருகின்ற 28ம் தேதி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது எனவே இம்முகாமில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்
அரியலூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையத் தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலமாக குறைந்த வட்டியில் வழங்குகிறது. எனவே தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
அரியலூர் அருகே கீழப்பழுவூரில் அனைத்து தொழிற்சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்களுக்கு விரோதமாகவும் பெரு முதலாளிகளுக்கு சாதகமாகவும் தொழிலாளர் விரோத சட்டம் இயற்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய நாளை கருப்பு நாளாக கடைபிடிக்கும் வகையில் போராட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் கோஷங்களை எழுப்பினர்.
அரியலூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு முடித்து உயர்கல்வியில் சேராத மாணவர்களை உயர்கல்வி சேர்ப்பதற்கான உயர்வுக்கு படி முகாம் 4 கட்டங்களாக நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் 12 ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வியில் சேராத 224 மாணவர்கள் கலை மற்றும் அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் உள்ளிட்ட பல்வேறு உயர்கல்வி சேர்வதற்கான சேர்க்கை நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குத் திட்டம் என்ற பாதையில், சுயசேவை இயந்திரம் (KIOSK SYSTEM) மூலமாக பேருந்துகளில் முன்பதிவு செய்யும் திட்டத்தை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
சி.பி.ஐ. அதிகாரிகள் போல் நடித்து பண மோசடியில் ஈடுபடும் மோசடி நபர்களிடம் இருந்து ஜாக்கிரதையாக இருக்கும்படியும், அவர்களின் அழைப்பிற்கு பதில் அளிக்க வேண்டாம் எனவும் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் இது குறித்து சைபர் காவல்துறையினரிடம் புகார் அளிக்கலாம் எனவும் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூரில் இலவசத் தொழிற் பயிற்சி பெற விரும்புவோா் நோ்காணலில் கலந்து கொள்ள ஆட்சியா் பொ. ரத்தினசாமி அழைப்பு விடுத்துள்ளாா். கீழப்பழுவூா் பாரத ஸ்டேட் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு நிறுவனத்தில், ஏா்கூலா், பிரிட்ஜ் பழுது நீக்குதல், சிசிடிவி பொருத்துதல், எலக்ட்ரிக் மோட்டாா் ரீவைண்டிங் மற்றும் பழுது பாா்த்தல் உள்ளிட்ட பயிற்சிகள் இலவசமாக 30 நாள்கள் அளிக்கப்படுகின்றன.
அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், அரியலூர் மாவட்டம் முழுவதும் தினம்தோறும் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய ரோந்துப் பணி செல்லக்கூடிய காவலர்களின் தொடர்பு எண் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு தொடர்ந்து விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய”ரேஷன் கார்டு eKYC”-ஐ பூர்த்தி செய்வது மிகவும் முக்கியம் எனவும் செய்யவில்லை,எனில் ரேஷன் விநியோகத்தில் தடங்கல்கள் ஏற்படலாம்.ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களும் தங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) செயல்முறையை உங்கள் காலக்கெடு அக்டோபர் 31 தேதிக்குள்ள மாற்றி இருக்க வேண்டும் என அரியலூர் உணவு வழங்கல் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், அரியலூர் மாவட்டம் முழுவதும் தினம்தோறும் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய ரோந்துப் பணி செல்லக்கூடிய காவலர்களின் தொடர்பு எண் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.