Ariyalur

News December 4, 2024

முந்திரிப் பயிர்களுக்கு காப்பீடு செய்ய ஆட்சியர் அழைப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் முந்திரி பயிர் 30,000 ஹெக்டர் பரப்பளவில் பயிர் செய்யப்படுகிறது. தற்போது இந்தியா வேளாண் காப்பீட்டு நிறுனத்தினரால் முந்திரிக்கென்று தனியாக வானிலை சார்ந்த காப்பீடு திட்டத்தை (Sampoorna Ritu Kawach) அறிமுகப்படுத்தியுள்ளனர். காப்பீட்டு திட்டத்தில் சேர 07.12.2024 கடைசி நாள் எனவும் மேலும் இத்திட்டத்தில் பயன்பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

News December 3, 2024

ஊதா நிறத்தில் மிளிரும் அரியலூர் மாவட்ட ஆட்சியரகம்

image

இன்று உலகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை அனைவரும் அரவணைப்போம்,அவர்களுக்கு தேவையான உதவிகளையும், அவர்களின் முன்னேற்றத்திற்கு தேவையான முன்னேற்பாடுகளையும் செய்வோம் என்பதை வலியுறுத்துவதற்காக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை பொதுமக்கள் அரவணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் நேற்று இரவு மாவட்ட ஆட்சியரகம் ஊதா நிறத்தில் ஒளிரூடப்பட்டது.

News December 3, 2024

அரியலூரில் 29 குடிசை வீடுகள் சேதம்

image

அரியலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று அரியலூர் 15 மில்லி மீட்டரும், செந்துறையில் 10.5 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் 25.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் என 29 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன. 

News December 3, 2024

அரியலூர்: ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் ஒத்திவைப்பு

image

அரியலூர் மாவட்ட அளவில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டத்தினை 06.12.2024 வெள்ளி கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்ட ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் நிர்வாக காரணங்களால் எதிர்வரும் 13.12.2024 வெள்ளிகிழமை அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

News December 2, 2024

அரியலூர்: 305 கோரிக்கை மனுக்கள் பெற்ற கலெக்டர்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெறும். அதன்படி இன்று மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது. இதில் முதியோர் உதவி தொகை, இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுதிறனாளி உதவிதொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 305 மனுக்கள் பெறப்பட்டன.

News December 2, 2024

ஃபெஞ்சல் புயல் எதிரொலி: அரியலூர் மாவட்டத்தில் 12 வீடுகள் சேதம்

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் நேற்று இரவு வரை தொடர் மழை பெய்து வந்தது. இதனையொட்டி அரியலூர், திருமானூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக 8 குடிசை வீடுகள் பகுதியளவும், 4 காரை வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரப்பில் தகவல் தரப்பட்டுள்ளது.

News December 2, 2024

அரியலூரில் பதிவான மழையளவு

image

அரியலூர் மாவட்டம் முழுவதும் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அதிகபட்சமாக செந்துறையில் 38.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், அரியலூர் – 12 மிமீ, திருமானூர் – 6.6 மிமீ, குருவாடி – 10 மிமீ, சுத்தமல்லி – 0.9 மிமீ, ஆண்டிமடம் – 20.4 மிமீ, தா.பழூர் – 0.4 மிமீ, ஜெயங்கொண்டம் – 22.6, மிமீ என மொத்தம் 123 மிமீ மழை பதிவாகி உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News December 1, 2024

அரியலூர் மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை 

image

ஃபெங்கள் புயல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் இதனால் அரியலூர் மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் ஒட்டி இருக்கும் கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். அவசரம் மற்றும் உதவி எண்கள்: 43291077. இந்த இலவச எண்ணில் அழைத்தால் தேவையான உதவி கிடைக்கும்.

News December 1, 2024

அரியலூரில் மின்தடை அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், ஈச்சங்காடு (2/12/ 24), மங்கலமேடு(4/12/24), கைகளத்தூர்(6/12/ 2024), அரியலூர், செந்துறை, உடையார்பாளையம் (7/12/24), நடுவலூர்(10/12/ 24), சாத்தமங்கலம் (11/12 /24), ஆண்டிமடம்(19/12/24), ஜெயன்கொண்டம் (21/12/24), ஓலையூர்(30/12/24) ஆகிய துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் இடங்களில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 30, 2024

அரியலூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்த புயலானது தற்போது மாமல்லபுரம் அருகே கரையை கடந்து வரும் நிலையில், அரியலூர் மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை எச்சரிக்கை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!