India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், வாராந்திர சிறப்பு விசாரணை முகாம், மாவட்ட கண்காணிப்பாளர் செல்வராஜ் காவல் தலைமையில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்றது. இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் 19 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுகிறது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இலைகடம்பூர் ரயில்வே சுரங்கப்பாதையில் நீர் சூழ்ந்துள்ளது. பத்துக்கு மேற்பட்ட கிராம பொதுமக்கள் பாலத்தைக் கடந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. வாகனங்கள் சில நேரங்கள் பழுதாகி நின்று விடுகின்றன. பேருந்து இதனால் வருவதும் இல்லை. ரயில்வே துறையும் மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் பருவமழை தொடர்பாக தகவல்கள் புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய பேரிடர் அவசர கால கட்டுப்பாட்டு மையத்தினை கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் 04329 228709 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் மழையின் காரணமாக ஏரிகளில் நீர் நிரம்பியுள்ளது. எனவே பொதுமக்கள் ஏரிகள் மற்றும் குளங்களின் அருகே குழந்தைகளை செல்லவோ, விளையாடவோ அனுமதிக்க கூடாது, ஏரிகள் மற்றும் குளங்களில் குளிப்பதற்காகவோ மற்றும் துணிகள் துவைப்பதற்காகவோ இறங்க வேண்டாம், மழைநீரினால் நனைந்துள்ள மின்கம்பங்களை தொடவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் குற்றம் சம்பவங்களை குறைக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில் அரியலூர் மாவட்டம் முழுவதும் தினந்தோறும் இரவு நேரங்களில் ரோந்து பணியில் காவலர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று (13.12.2024) ரோந்து பணி செல்லும் காவலர்களின் தொலை பேசி என்னை மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
அரியலூர் அருகே பெரிய திருக்கோணம் மருதையாற்றின் நடுவில் ஒரு குழந்தை உள்ளிட்ட 7 பேர் சிக்கிக் கொண்டனர். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சிக்கிக்கொண்ட ஒரு குழந்தை உள்ளிட்ட ஏழு பேரை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி நிவாரண பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அமராவதி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக 36 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கொள்ளிட ஆற்றில் நாளை 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. எனவே கொள்ளிட கரையோர ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என்றும், பொது மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் வெளிப்பிரிங்கியம் கிராமத்தில் வேங்கையன் ( 75) என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து அவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வந்துள்ளனர். மேலும் இது குறித்து அரியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக இன்று (டிச.13) பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டையை தொடர்ந்து அரியலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
அரியலூர் அருகே மேல மாத்தூர் கிராமத்திற்கு ஐந்து பெண்கள் ஆட்டோவில் சென்றுள்ளனர் ஆட்டோ வளைவில் திரும்பும் போது எதிரே வந்த கனரக வாகனம் மோதியதில் ஆட்டோ தூக்கி வீசப்பட்டு ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் காயமடைந்த நான்கு பேரும் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் இது குறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Sorry, no posts matched your criteria.