India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சீமான், தந்தை பெரியாரை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிப்பதை அரியலூர் மாவட்ட எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் வண்மையாக கண்டிக்கிறது. சமீப காலமாக சீமான் அரசியல் ரீதியாக முன்னுக்கு பின் முரணான வகையில் பேசிவருவதும்-தலைசிறந்த ஆளுமைகளை தரம்தாழ்ந்த வகையில் பேசுவதுமாக இருக்கிறார். இதனால் சீமானுக்கு எதிராக அரியலூர் மாவட்ட எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றுவதாக கூறப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ. ரத்தினசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு முதல் இளநிலை பட்டம் வரை படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் அரசின் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். விண்ணப்பங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து சமா்பிக்க வேண்டும்
அரியலூர் திருமானூர் ஒன்றியம் காமரசவள்ளி ஊராட்சியை சார்ந்த திமுக ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர், அகில இந்திய விசைத்தறி வாரிய உறுப்பினர், மு.காமரசவள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஆகியவர்கள் முன்னிலையில் 10க்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் தங்களை உறுப்பினர்களாக இன்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் இணைத்துக்கொண்டார்கள்.
பாமக அரியலூர் மாவட்ட செயலாளர் தமிழ்மறவன், மீன்சுருட்டி காவல் நிலையத்தில், “காடுவெட்டியில் மறைந்த முன்னாள் வன்னியர் சங்க தலைவர் குரு சிலைக்கு மரியாதை செலுத்த அமைச்சர் சிவசங்கர் வந்த நிலையில், அங்கு கூடியிருந்த பாமக-வை சேர்ந்த இளைஞர்கள் இட ஒதுக்கீடு குறித்து கோஷமிட்டனர். அப்போது அங்கிருந்த சில தி.மு.க.வினர் தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகார் அளித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள ஊராட்சி பகுதிகளில் வருகிற 20, 21, 25, 26-ஆம் தேதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட 3-ம் கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறையினரால் பரிசீலனை செய்யப்பட்டு 30 நாட்களுக்குள் தகுதியின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பிப்-07 ஆம் தேதியான இன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் அல்லாது இந்த முகாமில் எல்ஐசி நிறுவனம் கலந்து கொண்டு 200 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு தகுதியின் அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்ய உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இத்தகவலை ஷேர் பண்ணுங்க.
அரியலூர் மாவட்டம் சுப்புராயபுரம் கிராமத்தைச் சேர்ந்த முத்தழகன் (24) என்பவர் நேற்று (பிப்.06) தனது மோட்டார் பைக்கை பழுது பார்த்து விட்டு தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அரியலூரில் இருந்து திருமானூர் நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத டாட்டா ஏசி வாகனம் முடிகொண்டான் பேருந்து நிறுத்தம் அருகே கட்டுப்பாட்டை இழந்து, அருகில் உள்ள வாய்க்காலில் தலைக்குப்புற கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக டாட்டா ஏசி வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநருக்கோ, பேருந்துக்காக, நின்றிருந்த மக்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உங்கள் பகுதியில் நிலவும் சாலை, குடிநீர், மின்சாரம், பேருந்து வசதி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லையா? கவலை வேண்டாம், இப்போதே Way2News செயலியில் நிருபராக மாறி உங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை செய்திகளாக பதிவிட்டு அரசு அதிகாரிகள் மற்றும் மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். நிருபராக பதிவு செய்ய <
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே தகுதி வாய்ந்தோர் விண்ணப்பித்து பயன்பெறுமாறும், இது தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.