India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர், வானத்திரையான்பட்டிணத்தை சேர்ந்த தனம் என்ற 80 வயது மூதாட்டி உடையார்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு அடிக்கடி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று (ஜன.05) உடையார்பாளையம் பெரிய ஏரியில் மூதாட்டி தனம் பிணமாக கிடந்தார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற உடையார்பாளையம் போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் நாளை முதல் 10-01-2025 வரை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக சென்னை சென்றுள்ளார். ஏதேனும் அவசர அழைப்புக்கு சட்டமன்ற உறுப்பினரை தொடர்பு கொள்ள வேண்டும் என்றால், அவரது உதவியாளர் எண்ணை 90474 50699 தொடர்பு கொள்ளுமாறு எம்எல்ஏ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு புவியியல் துறை 2022ஆம் ஆண்டு நிலவரப்படி மக்கள்தொகை குறைவாக உள்ள மாவட்டங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்ட மக்கள்தொகை 8 லட்சமாக குறைந்து, 4 ஆம் இடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது . விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ள அரியலூர் மக்கள், பெரும் நகரத்தை நோக்கி படையெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. SHAREIT
அரியலூர் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை, திருமானூர், தா.பழூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து 201 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களின் பதவிக்காலம் இன்றுடன் (ஜன.05) நிறைவடைகிறது.
அரியலூரில் பொது நூலகத்துறை மற்றும் மாவட்ட நூலக ஆணை குழு சார்பில் இளைஞர் இலக்கிய திருவிழா நடைபெறுகிறது. அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் ஜன.6 (நாளை) முதல் ஜன.8ஆம் தேதி வரை கல்லூரி மாணவ மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி, வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.3000 முதல் ரூ.5000 வரை பரிசு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமியை, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அதே போல் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சின்னப்பா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோரை சந்தித்தும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் தெரிவித்தார்.
அரியலூர் அம்பாபூர் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் அனைத்தும் பிடாரி ஏரியில் கலப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுற்றுப்புறங்களில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இவ்வூரில் பிடாரி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் கோழி இறைச்சி மற்றும் குப்பைகள் போன்ற கழிவுகளை கொட்டப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் உதவியாளரிடம் மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். அதில் வேலை நேரம். வேலைகளை முறைப்படுத்துதல் சம்பள உயர்வு உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தப்பட்டிருந்தது. இதில் மாநில உதவி செயலாளர் செல்வி. மாவட்ட செயலாளர் சங்கீதா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்.
ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள சின்ன வளையம் மேம்பாலத்தில் இன்று(02/01/2025) இரவு சுமார் 7.30 மணியளவில் கார் மற்றும் இருசக்கர வாகன மோதிக்கொண்டதில் ஒருவர் பலியானார். மீன்சுருட்டி நோக்கி வேகமாக வந்த கார் தனது கட்டுப்பாட்டை இழந்து எதிரே உடையார்பாளையம் நோக்கி சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியதில் பைக் பின்னால் அமர்ந்து வந்த ஒருவர் பலியானார். ஒருவர் உயிர் தப்பினார்.
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (ஜன.03) நடைபெற உள்ள சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வுசெய்ய உள்ளனர். diploma, Degree படித்த மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.