India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், காலை 10 மணி வரை அரியலூர் மாவட்டத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE NOW
தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 15ம் தேதி ஜெயங்கொண்டம் மகிமை புரத்தில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் வாரணாசியில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்ட 2ம் கட்ட விரிவாக்கத்தினை துவக்கி வைத்து கொல்லாபுரத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
ஆண்டிமடம் அருகில் இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் பட்டப் பகலில் கோவின் உண்டியலை உடைத்து திருடிய கீழ மாளிகையைச் சேர்ந்த திருமுருகன் தப்பிக்க முயன்ற போது, பொதுமக்களின் முயற்சியால் சுற்றி வளைத்து பிடித்து ஜெயங்கொண்டம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்போர்களுக்கு எழுத்தறிவு தேர்வு கடந்த 10ஆம் தேதி 63 மையங்களில் நடைபெற்றது. இன்று விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி மேற்பார்வையாளர் வீ.அருமைராஜ் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் பயிற்றுநர்கள் இரவிச்சந்திரன், சத்தியபாமா, அகிலா, உத்திராபதி மதிப்பீடு பணியில் ஈடுபட்டிருதனர்.
ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்டசோழபுரத்தில் ராஜேந்திரசோழனால் கட்டப்பட்டு உலகப்புகழ் பெற்ற பிரகதீஸ்வரர் ஆலயத்தில் வரும் 15ஆம் தேதி அன்னாபிஷேக விழா நடைபெறுகிறது. இதனையொட்டி அன்னாபிஷேக விழாவிற்கு முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பந்தல் அமைப்பது, பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் ரத்தினசாமி உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உடையார்பாளையம், தா.பழுர், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
அரியலூர் மாவட்ட காவல்துறையில் சேர்க்கப்பட்ட நாய்க்குட்டிக்கு திருச்சி மண்டல காவல் தலைவர் கார்த்திகேயன் மோனா என்று பெயர் சூட்டினார் இதில் திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் M.மனோகர் , அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர் மோனா-வை அரியலூர் மாவட்ட காவல்துறை மோப்ப நாய் பிரிவினர் தலைமை காவலர் செல்வகுமாரிடம் பயிற்சிக்காக அளிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி நவம்பர் 19 அன்றும், ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 20 அன்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுத்தொகைகள் வழங்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்று போட்டியில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் உதவித்தொகை, இலவச வீட்டுமனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 309 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாளை தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெறுகிறது. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் உரிய ஆவணங்களுடன் முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.