Ariyalur

News January 28, 2026

அரியலூரில் அறுவடை இயந்திர வாடகை நிர்ணயம்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தலைமையில், தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை நிர்ணய கூட்டம் நடைபெற்றது. பெல்ட் டைப் இயந்திரத்திற்கு மணி ரூ.2600, டயர் டைப் இயந்திரத்திற்கு மணி ரூ.1800 என தீர்மானிக்கப்பட்டது. அரசு இயந்திரங்கள் குறைந்த வாடகையில் முன்பதிவு மூலம் பயன்படுத்தலாம். உழவர் செயலி வழியாக தனியார் உரிமையாளர்களை தொடர்புகொள்ளலாம்.

News January 28, 2026

அரியலூர்: திருமணத் தடை தீர்க்கும் நந்தி பகவான்

image

அரியலூர், திருமழபாடி என்ற ஊரில் அருள்மிகு வைத்தியநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் சிறப்பு என்னவென்றால் நந்தி பகவானுக்கு இங்கு தான் திருமணம் நடைபெற்றது. இங்கு திருமணம் தடை இருப்பவர்கள், திருமணம் தாமதமாபவர்கள் எல்லாம் பங்குனி புனர்பூசம் அன்று நடைபெறும் நந்தியின் திருமணத்தை பார்த்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். மணமுடிக்காத உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.

News January 28, 2026

அரியலூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

அரியலூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 28, 2026

அரியலூர்: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!

News January 28, 2026

அரியலூர்: மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்

image

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல்துறையினர் சாத்தம்பாடி பகுதிகளில், இன்று மாட்டுவண்டிகளில் மணல் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி, அப்பகுதிக்கு சென்ற போலீசார் சாத்தம்பாடி கொள்ளிடம் ஆற்று படுகையில் வந்த மாட்டு வண்டியை மறித்து சோதனை செய்ய முயற்சி செய்தனர், ஆனால் மாட்டு வண்டியை ஓட்டி வந்தவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடியதால், காவல்துறையினர் மாட்டு வண்டி பறிமுதல் செய்து அவர் தேடி வருகின்றனர்.

News January 28, 2026

அரியலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

அரியலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது <>இங்கே கிளிக் செய்து <<>>உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 28, 2026

அரியலூர்: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

image

அரியலூர் மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.’

News January 28, 2026

அரியலூர்:மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை

image

அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், காலமுறை ஊதியத்தில் பல்வேறு டெக்னீசியன்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் டயாலிசிஸ், இஎம்ஜி, எக்ஸ்ரே டெக்னீசியன்கள், பேச்சு சிகிச்சையாளர், விபத்து காயப்பதிவு உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவர்கள், உரிய ஆவணங்களுடன் ஜன.6-ஆம் தேதிக்குள் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் என்ற முகவரியில் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 28, 2026

அரியலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் தொலை உணர்வு மற்றும் வான்வழி சொத்து மேலாண்மை பிரிவின் ஆணையின்படி, தனியார் நிறுவனம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனிம வளங்களை கணக்கெடுப்பு பணி நடத்தப்பட உள்ளது. மேலும் ஆய்வு பணிக்கு வானூர்தி பயன்படுத்தப்பட உள்ளது. எனவே இது தொடர்பாக பொதுமக்கள் எவரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும், இதுகுறித்து புகார் தெரிவிப்பதை தவிர்க்க ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News January 28, 2026

அரியலூர் இரவு ரோந்து பணி காவலர்கள் விபரங்கள்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.27) இரவு 10 முதல் இன்று (ஜன.28) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!