India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தா.பழூர் அருகே நடுக்கஞ்சங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சின்னம்மா. இவர் நேற்று கொள்ளிடம் கரையோரம் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது கொள்ளிடத்தில் இருந்த முதலைக் கடித்ததில் பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து சின்னம்மா அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து த.பழூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
அரியலூர் தேளூர் GKM நகர் பகுதியில் உள்ள மரத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கயர்லாபாத் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு 6 முறை கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மே.1 இல் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால் தற்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இந்தாண்டு கிராம சபை கூட்டம் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இன்றுவரை கிராம சபை கூட்டம் நடத்துவதற்கான தகவல்கள்,வழிகாட்டுகளோ கிராமங்களுக்கு வழக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்தில் குழுமூர் கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலில் நேற்று (26.04.2024) தீமிதி திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவானது 18 நாட்களுக்கு முன் காப்பு கட்டுதளுடன் தொடங்கிய திருவிழா ஒவ்வொரு நாளும் அம்மன் வீதியுலா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அரியலூரில் உள்ள சிற்றூரான கரைவெட்டியில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. தமிழகத்தின் மிகப் பெரிய சரணாலயம் இதுவே. இங்கு திபெத், லடாக், ரஷ்யா, சைபேரியா போன்ற நாடுகளிலிருந்து பறவைகள் இடம்பெயர்ந்து அக்டோபர் முதல் மே வரை தங்கி செல்கின்றனர். 50க்கு மேற்பட்ட நீர்ப்பறவைகளும் 37 வகையான நிலப்பறவைகளும் வருகின்றன. பகலில் இரை தேடச் சென்று, மாலையில் சரணாலயத்திற்கு திரும்புவதால், மாலை நேரம் இங்கு செல்ல ஏற்றதாகும்.
பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் இளம்பை. இரா.தமிழ்ச்செல்வன் MA, Ex. மலை செந்துறையில் நேற்று (25.04.2024) தண்ணீர் பந்தலை பொதுமக்களின் நலனுக்காக திறந்து வைத்து நீர்,மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்டவகளை வழங்கினார். உடன் செந்துறை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் உதயம் எஸ். ரமேஷ் மற்றும் ஒன்றிய சார்பு அணி, உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சியில் உள்ள உலக பிரசித்தி பெற்ற கலியுக வரதராஜ பெருமாள் கோவில் ஆண்டு பெருந்திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ம் நாள் திருவிழாவான இன்று திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.
தமிழகத்தில் பல முக்கிய மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளியது,சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக புகார் எழுந்தது. அதை தொடர்ந்து கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 34 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். உச்சநீதிமன்ற உத்தரவின் படி அரியலூர் உட்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
மருதூர் கிராமத்தில் வசிக்கும் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு நீர்த்தேக்கதொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக போதிய குடிநீர் வழங்கவில்லை. பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கப்படும் என் கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
ஜெயங்கொண்டம் கல்லாத்தூர் பகுதியை சேர்ந்த சூர்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜயராகவன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த விஜயராகவனும் அவரது சகோதரர் பரமேஸ்வரன் சூர்யாவை கத்தியால் குத்தினர். இதில் காயமடைந்த சூர்யாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து வழக்கு பதிந்த போலீஸார் இருவரையும் நேற்று இரவு கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.