Ariyalur

News May 8, 2024

ஆண்டிமடம்: மின்சாரம் தாக்கி விவசாயி பலி

image

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த பெரியகிருஷ்ணாபுரம் மேலத் தெருவை சேர்ந்தவர் கண்ணப்பன் மகன் கருணாநிதி (55) விவசாயியான இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள மோட்டாரை போடுவதற்காக மோட்டாரை அவர் தொட்டபோது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 8, 2024

அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர அழைப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் கீழப்பழுரில் அமைந்துள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆர்வம் உள்ள மாணவ மாணவிகள் விண்ணப்பிக்க கல்லூரி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர நேரிலோ அல்லது www.tnpoly.in என்ற இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்றும் கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 8, 2024

மே.10 இல் கல்லூரி கனவு 2024

image

12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் சிறந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு 12ஆம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர். அரியலூரில் மே.10 இல் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

News May 8, 2024

மே தின பொதுக்கூட்டம்

image

அரியலூர் மாவட்டம் உட்கோட்டை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மே தினம் மற்றும் மறைந்த முருகேசன் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு சேகர் தலைமை வகிக்க, சிறப்பு விருந்தினர்களாக மாநில குழு உறுப்பினராக வாலண்டினா, ஜெயசீலன் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News May 7, 2024

Breaking: அரியலூரில் கோர விபத்து: 4 பேர் பலி

image

அரியலூர் – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், ஏலாக்குறிச்சி பிரிவு சாலை அருகே ஜல்லி ஏற்றி வந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்னால், இன்று மாலை கார் மோதியதில் காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவர்களின் உடலை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இறந்தவர்களின் விவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 7, 2024

அரியலூர் அடைக்கல மாதா ஆலயம் சிறப்பு!

image

அரியலூர் அருகே ஏலாக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ளது அடைக்கல மாதா தேவாலயம் . இந்த தேவாலயம் 18 ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் என்றழைக்கப்படும் கான்ஸ்டைன் ஜோசப் பெஸ்கி அவர்களால் கட்டப்பட்டு 1971இல் மறு சீரமைப்பு செய்யப்பட்டது. புராணக்கதைக் கொண்ட இந்த தேவாலயம் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தது. இங்கு 53 அடியில் அடைக்கல மாதாவிற்கு சிலையும் உள்ளது.

News May 7, 2024

நீங்களும் இனி ரிப்போர்ட்டர் தான்

image

தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல், உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்சிகள், புகார்கள், கோரிக்கைகள், அரசியல் நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

News May 7, 2024

கெத்து காட்டிய  அரசு பள்ளி மாணவர்கள்

image

அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 90 பள்ளிகளைச் சேர்ந்த 8218 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் குறிப்பாக 54 அரசு பள்ளிகளில் மட்டும் 2,323 மாணவர்களும், 2214 மாணவிகளும் ஆக மொத்தம் 4,537 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 2,199 மாணவர்களும், 2138 மாணவிகளும் என மொத்தம் 4337 பேர்  தேர்ச்சி பெற்றனர். அரசுப்பள்ளி தேர்ச்சி சதவீதம் 95.59 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

News May 7, 2024

அரியலூர்: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

image

அரியலூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் நேற்று பன்னிரண்டாம் வகுப்பு ரிசல்ட் வெளிவந்த நிலையில் இன்று முதல் ஆன்லைனில் கல்லூரி படிப்பான இளநிலை படிப்புகளுக்கு உள்ளிட்ட 13 பாடப்பிரிவுகளுக்கு ஆன்லைன் மூலம் மாணவ மாணவிகள் www.tngasa.in என்ற இணைய வழியில் விண்ணப்பித்து மாணவ, மாணவிகள் அரசு கல்லூரியில் குறைந்த தொகையில் படிப்பை படிக்க பயன்படுத்திக் கொள்ள ஸ்ரீதரன் கல்லூரி முதல்வர் கூறியுள்ளார்.

News May 7, 2024

அரியலூர் மக்களுக்கு தர்பூசணி வழங்கிய அதிமுகவினர்

image

அரியலூர் அரசு போக்குவரத்து பணிமனை அருகில் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தலை கழக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் இன்று திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீர் தர்பூசணி மோர் ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் தாமரை. ராஜேந்திரன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!