Ariyalur

News June 19, 2024

அரியலூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 21 ஆம் தேதி சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமில் முன்னணி தனியார்துறை நிறுவனங்கள், திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்களில் 300-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் கலந்து கொள்பவர்கள் <>https://www.tnprivatejobs.tn.gov.in/<<>> என்ற இணையதளத்தில் பதிவுசெய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதுள்ளார்.

News June 19, 2024

அரியலூர்: விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மாநில விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதை பெற விரும்பும் நிறுவனமோ, தனிநபரோ https://awards.tn.gov.in என்ற வலைத்தளத்தில் 05.07.2024-க்குள் விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

News June 19, 2024

திருநங்கையருக்கு முகாம்: ஆட்சியர் அழைப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் வரும் 21.06.2024 அன்று அனைத்து துறை அதிகாரிகளும் பங்குபெறும் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், அடையாள அட்டை, ஆதார் அட்டை திருத்தம், வாக்காளர் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. எனவே, இதில் திருநங்கைகள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 19, 2024

ஜீவன் ரக்க்ஷா விருது பெற அழைப்பு

image

இந்திய அரசின் சார்பாக நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துக்கள், தீவிபத்துக்கள், நிலச்சரிவு, விலங்குகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு ஜீவன்ரக்க்ஷா பதக்கவிருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. தகுதியானவர்கள் https://awards.gov.in இணையதளம் மூலம் ஜீன்.25 வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 19, 2024

சமுக சேவகர் விருது பெற அழைப்பு

image

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு சுதந்திர தினத்தன்று விருதுகள் வழங்கப்பட உள்ளது. எனவே அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவகர்கள் விருது பெற உரிய ஆவணங்களுடன் இம்மாதம் 20 ஆம் தேதிக்குள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா தெரிவித்துள்ளார்.

News June 19, 2024

அரியலூர்: விதிமுறைகளை மீறிய 50 வாகனங்கள் பறிமுதல்

image

அரியலூரில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 8 கார் உள்ளிட்ட 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் மது அருந்திவிட்டு ஓட்டியதாக 13 வாகனங்களை பறிமுதல் செய்து ரூ.1.30 லட்சம் வரை அபதாரம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தலைக்கவசம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட விதிமீறல்கள் செய்த 140 இருசக்கர வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News June 19, 2024

அரியலூர்: மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

image

அரியலூரில் ஜமாபந்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். இதில் அரியலூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு நாளையும் நாகமங்கலம் உள்வட்டத்திற்கு 21ஆம் தேதியும், கீழப்பழுவூர் உள்வட்டத்திற்கு 25ஆம் தேதியும், திருமானூர் உள்வட்டத்திற்கு 26ஆம் தேதியும் ஏலாக்குறிச்சி உள்வட்டத்திற்கு 27ஆம் தேதியும் நடைபெறும் எனவும் இதில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 18, 2024

விடுதிகள் உரிமம் பெற வேண்டும் – ஆட்சியர்

image

அரியலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கான விடுதிகள், பணிபுரியும் பெண்கள் விடுதிகள், பெண்களுக்கான இல்லங்கள்,சிறார் இல்லங்கள், பள்ளி குழந்தைகளுக்கான விடுதிகள், பள்ளியுடன் இணைந்து விடுதிகள் நடத்தும் நிறுவனங்கள் தமிழ்நாடு பெண்கள், குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் திட்டத்தில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறாத விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 18, 2024

அரியலூர்: மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

அரியலூர் ராஜாஜி நகர், கல்லூரி சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று மின் நுகர்வோர் நாள் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பங்கேற்று மின்சாரம் தொடர்பான குறைகளை மனுக்கள் மூலம் மேற்பார்வை பொறியாளரிடம் அளித்து பயனடையலாம் என அரியலூர் மின் துறை செயற்பொறியாளர் அய்யனார் தெரிவித்துள்ளார்.

News June 17, 2024

வீட்ளாயம்மன் கோவில் கும்பாபிஷேகம்

image

ஜெயங்கொண்டம், கண்டியங்கொல்லை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வீட்ளாயம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் மங்கள இசை, நாதஸ்வரம் இசைக்க மங்கள நடைபெற்றது. பின்னர் பரிவாரங்களுடன் புனித தீர்த்தக்கடம் புறப்பட்டு  சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத புனித நீரானது விமான கலசத்தில் ஊற்றப்பட்டு தீபாராதணை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

error: Content is protected !!