Ariyalur

News March 28, 2024

அரியலூர் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனம் மூலம் 100% வாக்குப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. வாகனத்தின் மூலம் குறும்படங்களை கிராமங்கள்தோறும் ஒளிபரப்பப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலரும் சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

News March 27, 2024

அரியலூர்: தந்தை, மகனுக்கு 10ஆண்டுகள் சிறை

image

அரியலூர் அருகே சிறுவளூரை சேர்ந்த சாமிநாதனுக்கும் கோவிந்தனுக்கும் இடையே கடந்த 2021ல் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த கோவிந்தன் மற்றும் அவரது மகன் தர்மராஜ் ஆகியோர் சாமிநாதனை உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்தனர்.
இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கோவிந்தன், தர்மராஜ் ஆகியோருக்கு தலா 10ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

News March 27, 2024

தேர்தல்: திருமாவளவன் வேட்புமனு தாக்கல்

image

சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதியில் இண்டி கூட்டணி சார்பில் போட்டியிடும் விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன் இன்று (மார்ச் 27) தனது வேட்புமனுவை தலைமைத் தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார். அப்போது அவருடன் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவசங்கர் ஆகியோர் உடனிருந்தனர். மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன் (மார்ச் 27) நிறைவடைகிறது.

News March 27, 2024

தனது தாயிடம் வாழ்த்து பெற்ற விசிக தலைவர்

image

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியின் சார்பில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அரியலூர் மாவட்டம் அங்கனுரில் உள்ள தனது தாயிடம் வாழ்த்துப் பெற்றார். இவர் கடந்த முறை சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விசிக நிர்வாகிகள் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

News March 26, 2024

மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஊராட்சி மன்ற தலைவர்

image

அரியலூர் மாவட்டம் தாமரைகுளம் ஊராட்சியில் உள்ள பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இன்று (26.3.2024) ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மேலும் மாணவ, மாணவிகள் சிறப்பான முறையில் தேர்வு எழுதி பெரும் மதிப்பெண்களை பெற்று நமது ஊராட்சிக்கு பெருமை சேர்க்கும் படி அவர்களை வாழ்த்தினார்.

News March 26, 2024

தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

image

நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் சிலால் 4 ரோட்டில் தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தை உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா தொடங்கி வைத்தார். 3 கி.மீ தொலைவில் நடைபெற்ற மினி மாரத்தான் ஓட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

News March 25, 2024

அரியலூர்: அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

image

சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மா. சந்திரகாசன் இன்று (25.3.2024) அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 25, 2024

வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி துவக்கம்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாராளுமன்ற தேர்தலினை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களின் விழிப்புணர்வு பேரணியினை
மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்ணா இ.ஆ.ப., இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

News March 25, 2024

தேர்தல் விழா: வேட்புமனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News March 24, 2024

அரியலூர்: மக்களிடம் ஆட்சியர் விழிப்புணர்வு

image

அரியலூர், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஒட்டு வில்லையினை பேருந்து கண்ணாடியில் ஒட்டியும், பேருந்தில் பயணம் செய்யும் பொது மக்களிடம் விழிப்புணர்வு  ஏற்படுத்தினார்.

error: Content is protected !!