India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விக்கிரமங்கலம் அருகே சாத்தம்பாடி ஊராட்சி கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சரவணன், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆப்ரேட்டர் மனோகரன் ,தூய்மை காவலர் அன்புமணி ஆகியோர் குஞ்சு வெளி கிராமத்திற்கு வீட்டு வரி வசூல் செய்வதற்கு சென்றுள்ளனர்.அப்பொழுது குஞ்சு வெளி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் என்பவர் அவர்களை திட்டியாதகவும் இது குறித்து ஊராட்சி செயலர் அளித்த புகாரில் முருகானந்தம் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்களவை தேர்தல் தொடர்பாக வேட்பாளர்கள், முகவர், அரசியல் கட்சியினருடனான தேர்தல் நன்னடத்தை விதி மற்றும் செலவினங்கள் தொடர்பான விளக்கக் கூட்டம் தேர்தல் அலுவலர்ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இதில், தேர்தல் பொது பார்வையாளர் போர் சிங் யாதவ் முன்னிலை வகித்தார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாக்காளர்களிடையே 100 % வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “தேர்தல் பருவம், தேசத்தின் பெருமிதம்” என்ற கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா கையெழுத்திட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு தேதியில் மாற்றம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல்.10 அன்று நடைபெற இருந்த அறிவியல் தேர்வு 22.4.2024 அன்றும், 12.4.2024 அன்று நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு 23.4.2024 அன்றும் நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. இதனால் கோடை விடுமுறை தள்ளிப்போவதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடும் விசிக கட்சிக்கு பானைச் சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார். சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் விசிக சார்பில் போட்டியிடுகின்றனர். திமுக கூட்டணியில் விசிக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தெற்கு புதுக்குடி கிராமம் கீழத் தெருவை சேர்ந்தவர் திருமுருகன் மகன் மணிகண்டன். கார் ஓட்டுனரான இவர் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் மணிகண்டனை நேற்று(மார்ச். 29) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இலுப்பையூர் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னம்மாள். டேங்க் ஆப்ரேட்டரான இவர் நேற்று காலை அங்குள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியின் மின் மோட்டாரை இயக்க சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர் பொன்னம்மாள் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பினார். இது குறித்து புகாரின் பேரில் செந்துறை காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற அமைச்சர் சிவசங்கரின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அஸ்தினாபுரம் அருகே பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். பின்னர்
காரில் பொருட்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் அவர் பயணத்தை தொடர அனுமதித்தனர்.
தமிழகத்தில் 39 தொகுதிகளில் வருகின்ற ஏப்ரல்.19 அன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் அனைவரும் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. ஏப்ரல் 19 அன்று அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
அரியலூர் நகர அண்ணா சிலை அருகே காவல்துறை உணவகத்தின் முன்பாக இன்று கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பயன்படும் வகையில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் பொருட்டு அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் திறந்து வைத்து, பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.