Ariyalur

News June 29, 2024

அரியலூர்: செயற்கை இழை ஹாக்கி ஆடுகளம்

image

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் ஹாக்கி பயிற்சிகள் வழங்கப்பட்டு ஹாக்கி விளையாட்டுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அரியலூரைச் சேர்ந்த ஹாக்கி வீரர் கார்த்திக் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் காக்கி விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் செயற்கை இழை ஆடுகளம் அமைக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

News June 29, 2024

அரியலூரில் 11 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

image

அரியலூர் மாவட்டத்தில் வருவாய்த் துறையில் கோட்டாட்சியர் உட்பட 11 வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி ஜெயங்கொண்டம் ஜெஎல்பிபி, டான்செம், வருவாய் கோட்டாட்சியர், தனி துணை வட்டாட்சியர், கோட்ட கலால் அலுவலர், தனி வட்டாட்சியர் உட்பட 11 அலுவலர்களுக்கு பதவி இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News June 28, 2024

சிறப்பு கிராம சபை கூட்டம்

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் கலைஞர் நினைவு இல்லம், கிராமப்புற வீடுகளுக்கான பழுதுபார்க்கும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வுக் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் பயன்பெற விரும்பும் பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கிராம சபைக் கூட்டத்தில் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்,

News June 28, 2024

ரூ.15 லட்சம் கடன் உதவி – ஆட்சியர் அழைப்பு

image

அரியலூரில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த 18 – 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு ரூ.15 லட்சம் வரை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.இதில் விண்ணப்பிக்க விரும்புவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது www.tabcedco.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News June 28, 2024

ஆசிரியர் பணி ஆட்சியர் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மேல்நிலைப்பள்ளிகளில் வணிகவியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர், கணிதம், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் ஜூலை.5 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா தெரிவித்துள்ளார்.

News June 27, 2024

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நாளை (ஜூன்.28) நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா தெரிவித்துள்ளார்.

News June 27, 2024

பெண்களுக்கு வேலை வாய்ப்பு – ஆட்சியர் 

image

அரியலூர் மாவட்டத்தில் குடும்பம், பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அவசரகால உதவிகளை வழங்கி பாதுகாக்க சமூக நலத்துறையின் கீழ் சகி ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்படுகிறது. இதில் காலியாக உள்ள வழக்குப் பதிபவர், பாதுகாவலர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் தங்கள் சுயவிவரங்களுடன் ஜூன்.12 க்குள் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சகி அலுவலகத்தில் வழங்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 26, 2024

வேளாண் உபகரணங்கள் வழங்க அழைப்பு

image

அரியலூர் மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் வேளாண் கருவிகள் விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்கப்பட்டு வருகின்றது. விவசாயிகள் அருகிலுள்ள கூட்டுறவு சங்கங்களை தொடர்பு கொண்டும், உழவன் செயலி மற்றும் கூட்டுறவு இணையதளம் https://rcs.tn.gov.in/ மூலம் சங்கங்களில் உள்ள வேளாண் உபகரணங்களை முன்பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

News June 26, 2024

ரூ.75 லட்சம் கடன் உதவி

image

முதல் தலைமுறை தொழில் முனைவராக உருவாக்கிட புதிய தொழில் முனைவோர் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் படித்த இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வங்கிகள் மூலம் 25% மானியத்துடன் ரூ.75 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் https://msmeonline.tn.gov.in/needs/index.php என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 25, 2024

ரூ.75 லட்சம் கடன் உதவி

image

முதல் தலைமுறை தொழில் முனைவராக உருவாக்கிட புதிய தொழில் முனைவோர் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் படித்த இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வங்கிகள் மூலம் 25% மானியத்துடன் ரூ.75 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் https://msmeonline.tn.gov.in/needs/index.php என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!