Ariyalur

News July 7, 2024

நிலக்கடலைக்கு காப்பீடு செய்ய அழைப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நிலக்கடலைக்கு காப்பீடு செய்ய கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அறிவித்துள்ளார். இதன்படி ஆண்டிமடம், குவாகம், அரியலூர், நாகமங்கலம், ஜெயங்கொண்டம், குண்டவெளி, உடையார்பாளையம், பொன்பரப்பி, மாத்தூர், செந்துறை, ஏலாக்குறிச்சி, கீழப்பழூர், சுத்தமல்லி மற்றும் தா.பழூர் ஆகிய பகுதிகளில் நிலக்கடலைக்கு பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

News July 5, 2024

அரியலூர்: மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  09.07.2024, 10.07.2024 ,11.07.2024, 12.07.2024, 15.07.2024 ஆகிய தேதிகளில் அரியலூர் கீழப்பழூர் பொய்யூர் தத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாணவ மாணவியர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். 

News July 4, 2024

அரியலூர்: மாணவர்களுக்கு கட்டுரை போட்டி

image

தமிழ்நாடு என பெயர் சூட்டிய சூலை 18 ஆம் நாளினை தமிழ்நாடு நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது. வரும் ஜூன் 9ஆம் தேதி அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News July 4, 2024

அரியலூர்: ஸ்பாட் அட்மிஷன்

image

அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர நேரடி சேர்க்கை (Spot Admission) நடைபெறுகிறது. பயிற்சியில் சேர விரும்புபவர் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வரவும். ஏற்கனவே பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News July 4, 2024

அரியலூர்: கடன் வழங்கும் முகாம்

image

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு டாப்செட்கோ மற்றும் டாம்கோ மூலம் சுயதொழில் செய்வதற்காக தொழிற்கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கடன் பெற விரும்புபவர்கள் தென்னூரில் 11ஆம் தேதி, கோட்டியாலில் 16ஆம் தேதி செந்துறையில் 24ஆம் தேதியும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

News July 2, 2024

அரியலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான 250 கோழிகள் 100 நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆர்வமும் திறனும் கொண்ட கிராமப்புற பயனாளிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் 10.07.2024-க்குள் கால்நடை மருந்தகத்தில் ஒப்படைக்க வேண்டும் என ஆட்சித் தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

News July 2, 2024

அரியலூர்: ரூ.41 லட்சம் மதிப்பிலான செல்போன்

image

அரியலூர் மாவட்டத்தில் காணாமல் போன மொபைல் போன்களை CEIR PORTAL- மூலமாக, கண்டுபிடிக்க ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. அரியலூர் மாவட்ட அனைத்து காவல் நிலையங்களிலும், கடந்த மூன்று மாத காலமாக CEIR PORTAL மூலமாக கண்டுபிடிக்கப்பட்ட சுமார் ரூ.41.5 லட்சம் மதிப்பிலான 309 மொபைல் போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் அதன் உரிமையாளர்களிடம் வழங்கினார்.

News July 1, 2024

அரியலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு சார்பில், கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் தொடர்பான புகார்களை Help Line No.10581, Whatsapp No.9489646744 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம். இது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து அரசு அலுவலா்களிடம் வழங்கி விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டும் என ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா தெரிவித்தார்.

News July 1, 2024

அரியலூர் ஆட்சியர் முக்கிய தகவல்

image

தமிழ்நாட்டில் சொந்த கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகையை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 30, 2024

அரியலூர் பெண்களுக்கு வேலை

image

அரியலூர் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் ’சகி’ ஒருங்கிணைந்த சேவை மையத்தில், காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தொகுப்பூதிய அடிப்படையில் வழக்குப்பணியாளர் மற்றும் பாதுகாவலர் ஆகிய 2 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. இப்பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். விருப்பம் உள்ளவர்கள் ariyalur.nic.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!