India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, சிதம்பரம் மற்றும் குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்று நடைபெற்றது. இதனை ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கீழப்பழுவூரில் தோ்தல் பறக்கும் படையினா் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனை மேற்கொண்டதில் அதில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்சென்ற ரூ.89,100 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், செந்துறை அகரம் கிராமத்தில் நடத்திய சோதனையில் மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த நிதி நிறுவனர் இளவரசன்(35) உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ 1,34,230-ஐ பறிமுதல் செய்யப்பட்டது.
இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் அதிமுக சிதம்பரம் தொகுதி வேட்பாளர் மா. சந்திரகாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் மாவட்ட கழக செயலாளர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர் ரமேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் தெய்வமணி ரமேஷ், ஜெயப்பிரகாஷ், சதீஷ், காமராஜ், மணிகண்டன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்..
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள குறைதீர் புகார் பெட்டியில் பிஏசிஎல் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் நேற்று மனு அளித்தனர். அதில்
மூடப்பட்ட
பிஏசிஎல் எனும் தனியார் காப்பீடு நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு முதலீடு தொகையை திருப்பி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே முதலீடு செய்துள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்தனர்.
அரியலூர் மாவட்ட எல்லையான கொள்ளிடம் ஆறு மதனத்தூர் பாலத்தின் மேல் புறத்தில் அமைந்துள்ள ஆர்எஸ் பதின் மரம் காடு உள்ளது. இந்த இடத்தில் நேற்று (ஏப்.8) திடீரென பற்றிய தீ கொழுந்து விட்டு எரிந்தது. இந்த சம்பவம் கடுமையான வெப்பத்தினால் ஏற்பட்டதா அல்லது யாரேனும் மர்ம நபர்களின் வேலையா என்று தெரியவில்லை. மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.
அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும்,, பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அரியலூர் நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு ஒத்திகையினை ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிதம்பரம் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா இன்று ஆய்வு செய்தார். உடன் அலுவலர்கள், போலீசார் இருந்தனர்.
அரியலூர் அடுத்த பொய்யாத நல்லூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டியாகம் இன்று நடைபெற்றது.
பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று நடைபெற்ற மகா சண்டியாகத்தில் பக்தர்கள் புடவை, பழங்கள், மிளகாய் உள்ளிட்டவைகளை யாகத்தில் போட்டு தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடத்தப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில், அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்துறை அண்ணா நகர் பகுதி பேருந்து நிலையம் அருகில் நேற்று இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபதுக்குள்ளானது. இதில் சேடக்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து செந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.