Ariyalur

News July 14, 2024

போக்குவரத்து துறை அமைச்சருக்கு பாராட்டு

image

அரியலூர் மாவட்டம் சார்பாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பொறுப்பாளராக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் நியமனம் செய்யப்பட்டார். கொடுக்கப்பட்ட பணியை மிகச்சிறப்பாக செய்து திமுக வேட்பாளர் சிவாவின் மாபெரும் வெற்றியை உறுதி செய்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

News July 14, 2024

மணல் குவாரி அமைக்க நினைவு ஆர்ப்பாட்டம்

image

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே தா-பழூரில் நினைவு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. வாழைக்குறிச்சி கிராமத்தில் மாட்டு வண்டி மணல் குவாரி அமைத்துத் தர வேண்டி மாட்டு வண்டி ஓட்டுனர் நலச்சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தா-பழூர் அண்ணாசிலை அருகில் நினைவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

News July 13, 2024

அரியலூர்- ஹாக்கியில் மதுரை அணி சாம்பியன்

image

அரியலூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.  இறுதிப்போட்டியில் மதுரை திருநகர் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது. 2ம் இடம் தஞ்சாவூர் செயின்ட் அந்தோணிப் பள்ளி, 3 ஆம் இடம் அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற் கோப்பை சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

News July 13, 2024

உங்களைத் தேடி உங்கள் ஊரில் – ஆட்சியர்

image

அரியலூர் மாவட்டத்தில் ஜூலை மாதத்திற்கான “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” முகாம் அரியலூர் தாலுகாவில் ஜூலை.19 முதல் ஜூலை.20 வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு அரசின் நலத்திட்டங்கள், சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வர். இதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுவை ஜூலை.19 மாலை 4.30 மணிக்கு அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 12, 2024

அரியலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-I தேர்வுகள் நாளை 07 தேர்வு கூடங்களில் 2,551 தேர்வாளர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பேருந்து வசதிகள் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா தெரிவித்துள்ளார்.

News July 12, 2024

967 இடங்களில் மண் எடுக்க அனுமதி

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் வண்டல், களிமண் எடுக்க அனுமதி வழக்கப்பட்டுள்ளது. அதன்படி நீர்வளத்துறை கட்டுப்பாட்டிலுள்ள 84 ஏரி, குளங்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள 883 ஏரி, குளங்கள் மண் எடுக்க தகுதி வாய்ந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. மண் எடுக்க விரும்புவோர் https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 11, 2024

நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்

image

அரியலூர், குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை பெரியார் நினைவு சமத்துவபுரம் சமுதாயகூடத்தில் ஊரகப்பகுதிகளில் மக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வகையில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை அமைச்சர் சிவசங்கர் இன்று (11.07.2024) துவக்கி வைத்து, பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

News July 11, 2024

அரியலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம் அரியலூர் வட்டத்தில் 19.07.2024 அன்று காலை 9.00 மணி முதல் 20.07.2024 காலை 9.00 மணி வரை ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு துறைசார்ந்த அரசின் அனைத்து நலத்திட்டங்கள் குறித்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அளிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

News July 11, 2024

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற அழைப்பு

image

அரியலுர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்போருக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.100, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆர்வமுள்ளவர்கள் https://tnvelaivaaippu.gov.in இணையதளத்தில் ஆக.30 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News July 11, 2024

300 நபர்களுக்கு வேலை வாய்ப்பு – ஆட்சியர்

image

அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மைய அலுவலகத்தில் நாளை(ஜூலை.12) 18 – 35 வயதுடையவர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 300 க்கும் மேற்பட்ட காலிபணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in இனையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 94990 55914 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!