India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அரியலூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரியலூர், கீழப்பட்டியில் ஆசிரியராக பணியாற்றுபவர் செந்தில் செல்வம். இவர் ஏப்.1 ஆம் தேதி பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த இளைஞர்கள் அவர் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றனர். அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்த வழக்கு செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இருவருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் சிறுகடம்பூர் கிராமத்தில் உள்ள செல்லியம்மன், மாரியம்மன் ஆலய திருத்தேரோட்டம் கடந்த வாரம் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது . திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நாளை (22.05.2024) நடை பெற உள்ளது. அது சமயம் சுற்றுவட்டார கிராம பொது மக்கள் கலந்து கொண்டு அம்மன் அருளை பெற்று செல்லுமாறு விழா குழுவின் சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்த லோகநாதன் என்பவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது விருத்தாச்சலத்தில் இருந்து ஆண்டிமடத்தை நோக்கி வந்த கார் லோகநாதன் இருசக்கர வாகனத்தில் மீது மோதியதில் லோகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் அருகே உள்ள செட்டிநாடு சிமெண்ட் ஆலை உள்ளே முருகேசன் என்பவர் மதுரம் என்ற பெயரில் கேண்டீன் நடத்தி வருகிறார். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கீழப்பழுவூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் போலீசார் நடத்திய சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட 400 புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து முருகேசன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
செந்துறை_ மருதூர் கீழப்பட்டி தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக உள்ள செந்தில் செல்வம் பள்ளிக்கு செல்லும் போது டூ வீலரில் வந்த இரு இளைஞர்கள் அவர் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்ற போது பொதுமக்கள் அவர்களைப் பிடித்து செந்துறை போலீசில் ஒப்படைத்தனர். செந்துறை நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட சரவணன், ஆமோஸ் பெர்ணான்டஸ் ஆகியோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
வெளிநாடு செல்லும் அரியலூர் மாவட்ட இளைஞர்கள் கவனமுடன் இருக்குமாறு ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். அதில் சமூக வலைதளம் மூலம் மூளைச்சலவை செய்யப்பட்டு ஐடி நிறுவனங்களில் அதிக சம்பளத்துடன் வேலை என்று ஏமாற்றி வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சட்ட விரோத செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாக தகவல் வருகிறது. எனவே முகவர்கள் விவரங்களை www.emigrate.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொண்டு செல்லுமாறு தெரிவித்துள்ளார்.
செந்துறை வட்டம் மருவத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் வருடா வருடம் திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவில் முனிசாமிக்கு மாலை அலங்காரம் செய்து திருவீதி உலாவும், மறுநாள் ஊரணி பொங்கல் திருவிழாவும் நடைபெறும். இதில் மருவத்தூர் கிராம மக்கள் மட்டுமின்றி அருகில் உள்ள கிராம மக்களும் கலந்து கொண்டு தங்கள்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது அரியலூரில் 15 மில்லி மீட்டர் திருமானூர் 41.4 மில்லி மீட்டர் ஜெயங்கொண்டம் 2.4 மில்லி மீட்டர் செந்துறை 36 மில்லி மீட்டர் ஆண்டிமடம் 2 மில்லி மீட்டர் சித்தமல்லி நீர்த்தேக்கம் 80 மில்லி மீட்டர் குருவாடி 16 மில்லிமீட்டர் தா.பழூர் 4 மில்லி மீட்டர் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் 196.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது
அரியலூர் மாவட்டம் வரதராஜன் பேட்டையை அடுத்த ஆரோக்கியபுரம் பகுதியில் ஆண்டிமடம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட இருதயசாமி , மற்றொரு இருதயசாமி , செல்வராசு, சின்னப்பராஜ், பெரியநாயகம் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.