India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடத்தில் நீர்வரத்து தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண்ராய் ஆய்வு மேற்கொண்டார். பல்வேறு துறைகளில் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் உயிர்காக்கும் உபகரணங்கள், மணல் தயார் நிலையில் உள்ள விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் அண்ணா சிலை அருகில் காங்கிரஸ் கட்சியினர் மாவட்டத் தலைவர் சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மக்களவையில் சாதி ரீதியாக பேசிய பாஜக எம்.பி அனுராக் தாகூர் மற்றும் அவரை ஊக்கப்படுத்தும் விதமாக அந்த பதிவை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பிரதமர் மோடியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கு ஆடி திருவாதிரை விழா, தமிழக அரசால் நாளை விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து உள்ளூர் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024-ம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்களிடமிருந்து கடந்த 13/07/24 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்தவகையில், அரியலூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் தமிழ் ஆர்வலர்கள், தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க வரும் 8-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த விஜயலட்சுமி இரண்டு மாதங்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்ற நிலையில் அப்பணியிடம் காலியாக இருந்தது. இந்நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மதுரை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலராக இருந்த சிவானந்தம், அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அரியலூரில் முதிர்ந்த நிலையில் உள்ள கழிவு செய்யப்பட்ட 11 காவல் வாகனங்கள், 8 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளுக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி பொது ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் கலந்து கொள்வோர் ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 8:00 மணி முதல் 10:00 மணிக்குள் 1000 ரூபாய் முன் வைப்பு தொகையினை செலுத்தி தங்கள் பெயரினை பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு புதிய கட்டிடங்களை கட்ட உரிய நடவடிக்கைகளையும், போதிய நிதியையும் ஒதுக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதுடெல்லியில் சட்டம் மற்றும் நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வாலை சிதம்பரம் தொகுதி எம்பியும், விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து மனு அளித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் இரண்டாம் கட்ட முகாம் இன்று ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம் குவாகம் ஊராட்சி, செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அரியலூர் மாவட்டம் வாரணாசி கிராமத்தில் அரியலூர் – தஞ்சை நெடுஞ்சாலையில் வழக்கம்போல மீன் ஏற்றச் சென்ற லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து அரியலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள காட்டாத்தூர் மேலத்தெருவை சேர்ந்த அன்புமணி (25). இவர், 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து மகளிர் நல அலுவலர் சாந்தி ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் அன்புமணியை போலீசார் கைது செய்து சிறுமியை மீட்டனர்.
Sorry, no posts matched your criteria.