Ariyalur

News November 19, 2024

சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணி

image

அரியலூர் சமூக நலத்துறையின் கீழ் சகி ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகின்றது. இதில் மைய நிர்வாகி, வழக்குப் பணியாளர் உள்ளிட்ட பணியிடத்திற்கு ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே இப்பணியிடத்திற்கு வருகிற டிச-03 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News November 18, 2024

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

image

தமிழ்நாடு முதலமைச்சரால் உங்களை தேடி, உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு தாலுகாவினை தேர்வு செய்து, அரசின் நலத்திட்டங்கள், சேவைகள் தங்கு தடையின்றி மக்களை சென்று அடைவதை உறுதி செய்யும் வகையில் ஆய்வு செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நவ 20 மற்றும் 21 ஆம் தேதியில் அரியலூர் வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்ள அறிவிப்பு.

News November 18, 2024

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் 01.01.2000க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும் 01.01.2000க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறந்த பதிவுகளுக்கும், குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள நகராட்சி அல்லது வட்டாட்சியர், பேரூராட்சி அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என அரியலூர் கலெக்டர் அறிவித்துள்ளார். SHARE IT.

News November 17, 2024

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் ஏலம்

image

அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினரால், பறிமுதல் செய்யப்பட்ட 46 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 நான்கு சக்கர வாகனம் 19.11.2024 அன்று காலை அரியலூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. எனவே இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News November 16, 2024

வாக்காளர் சிறப்பு முகாம்

image

அரியலூர் மாவட்டம் முழுவதும் இன்று மற்றும் நாளை வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் ஜனவரி 2025ஐ அடிப்படையாகக் கொண்டு 18 வயது எட்டும் அனைவரும், புதிய வாக்காளராக சேர பதிவு செய்யலாம். மேலும் இதில் பெயர், முகவரி திருத்தம், நீக்கல் போன்றவற்றையும் செய்து கொள்ளலாம். இது அந்தந்த பகுதி வாக்குசாவடி மையங்களில் நடைபெறும். ஷேர் செய்யவும்

News November 15, 2024

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்: முதல்வர் தொடக்கம்

image

திருமானூர் ஊராட்சி ஒன்றியம் வாரணவாசி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ என்ற திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மேலும் இத்திட்டத்தின் வாயிலாக 76 ஆயிரத்து 705 ஊட்டச்சத்து குறைபாடு உடைய 0-6 மாதங்களுடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

News November 15, 2024

காலணி தொழிற்சாலை அமைக்க அடிக்கல் நாட்டிய முதல்வர்

image

அரியலூர் மகிழைபுரத்தில் 130 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டையில், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் காலணி தொழிற்சாலை அமைப்பதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி வைத்து பணிகளைத் தொடங்கி வைத்தார். மேலும் இந்த காலணி தொழிற்சாலை மூலம் 15 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.

News November 14, 2024

தமிழக முதல்வரை வரவேற்ற அரியலூர் மாவட்ட ஆட்சியர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி புத்தகம் வழங்கி வழங்கி வரவேற்றார். இதனை பெற்று கொண்ட மு.க. ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு ஜெயங்கொண்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.

News November 14, 2024

முதலமைச்சர் இன்று அரியலூர் வருகை

image

அரியலூர் மாவட்டத்திற்கு முதல்வர் வருகையை ஒட்டி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். விமான மூலம் இன்று மாலை திருச்சி வழியாக அரியலூர் வருகிறார். இதன் காரணமாக ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதித்து ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News November 14, 2024

அரியலூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், காலை 10 மணி வரை அரியலூர் மாவட்டத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE NOW