India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஈரோடு மீன் வளம் மற்றும் மீனவா் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குண்டேரிப்பள்ளம் நீா்த்தேக்கத்தின் மீன் பிடி உரிமையை 5 ஆண்டு காலத்துக்கு மீன் பிடி குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப் புள்ளி வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளங்கள்,மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணையதள மூலமாக டிச 10 தேதிக்குள் சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கரூரில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் சங்கிலி குண்டு எறிதல், வட்டெறிதல் உள்ளிட்ட போட்டிகள் இடம்பெற்றன. இந்த போட்டியில், நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த கரசப்பாளையத்தை சேர்ந்த சிவசாமி முதல் பரிசை பெற்றார். அவருக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 98 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. பெரம்பலூா் (ம) குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5,90,490 வாக்காளா்கள் உள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்துார் எஸ்.ஆர்.நாயுடு காலனியைச் சேர்ந்தவர் தங்கேஸ்வரி 35. இவர் டூவீலரில் தனது 8, 4 வயதுள்ள இரு குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சாத்துார் ரோட்டில் மீனம்பட்டி அருகே சென்ற போது அடையாளம் தெரியாத நம்பர் ஒட்டி வந்த டூவீலர் மோதியதில் மூன்று பேரும் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்கள், தங்களது எஸ்ஐஆர் படிவத்தில் கோரப்பட்டுள்ள வாக்காளர்கள் அல்லது வாக்காளர்கள் உறவினர்களின் 2002/2005 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் விவரங்கள் தெரியவில்லை என்றால், படிவத்தில் அடிப்படை விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து, படிவத்தின் இறுதியில் கையொப்பமிட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்தும் கூவத்தூரில் இருந்து தனியார் நிறுவனத்திற்கு 20 பெண் ஊழியர்களை ஏற்றிச் சென்ற வேனும் இன்று அதிகாலை கல்பாக்கம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் கரன்சி , லேம்ஸ்ராக் பகுதிகளில் கடந்த வாரத்தில் இரு காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன.வனத்துறையினர் கண்காணித்து அளக்கரை வனப்பகுதிக்கு விரட்டினர். கோத்தகிரி பகுதியில் இருந்து வந்த இந்த யானைகள் அளக்கரை தேயிலை தோட்ட பகுதியில் முகாமிட்டுள்ளது. வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் தேயிலை பறிக்க செல்ல தொழிலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெம்பாக்கம் தாலுகா பனமுகை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு பிரனிதா (11) உள்ளிட்ட 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 23-ந்தேதி காலை வேர்க்கடலை சட்னியுடன் இட்லி சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில், தாய், மகள்ககுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அனைவரும் வேலூரில் மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பிரனிதா(11) பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் 2முதியவர்கள் உயிரிழந்தனர். கவரைப்பேட்டை அருகே பைக்கில் சென்ற அகமது உசேன் (65) என்பவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். அதேபோல், ஆர்.கே.பேட்டை அருகே சாலையில் நடந்து சென்ற ராமலிங்கம் (70) என்பவர் பைக் மோதியதில் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 2சம்பவங்கள் குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. நேற்று நள்ளிரவு வரை இடைவிடாது மழை பெய்த நிலையில் இன்று காலை முதல் சற்று மழை ஓய்ந்துள்ளது. நேற்று காலை முதல் இன்று காலை 6.30 மணி வரையிலான நிலவரப்படி அதிகபட்சமாக சீர்காழியில் 41.30 மிமீ மழை பெய்துள்ளது மயிலாடுதுறையில் 23.50மிமீ மணல்மேட்டில் 22மிமீ, கொள்ளிடத்தில் 36மிமீ, தரங்கம்பாடியில் 29.50மிமீ, செம்பனார் கோயிலில் 24மிமீ பதிவாகியுள்ளது
Sorry, no posts matched your criteria.