India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இரவு நாகை, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் அங்குள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விட வாய்ப்புள்ளது. இன்னும் சற்று நேரத்தில் விடுமுறை குறித்த அறிவிப்பை ஆட்சியர்கள் வெளியிடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

SIR-க்கு எதிராக தவெக நடத்திய போராட்டம் வெறும் கண்துடைப்பு என சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். உண்மையில் SIR எதிர்ப்பதாக இருந்தால் விஜய் SC-ல் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் விஜய் RSS சித்தாந்தத்துடன் ஒன்று பட்டுள்ளதாகவும், இருவரும் ஒன்றாக இணைவார்கள் எனவும் கூறியுள்ளார். SIR-க்கு எதிராக விஜய் போட்ட வீடியோவில் மத்திய அரசை விமர்சிக்கவில்லை எனவும் சாடியுள்ளார்.

தங்கத்தின் மீதான மக்களின் ஆர்வத்தை பயன்படுத்தி, பல நிறுவனங்கள் குறைந்த விலையில் முதலீடு செய்யலாம் என சொல்லி டிஜிட்டல் தங்க விற்பனையை அதிகரித்தன. இதனால் கடந்த செப்டம்பர் மாதத்தில் அதன் விற்பனை ₹1,410 கோடியாக இருந்தது. ஆனால் இந்த முதலீடு ஆபத்தானது என பொருளாதார நிபுணர்கள் மக்களை எச்சரித்தனர். இதனால் அக்டோபர் மாதத்தில் டிஜிட்டல் தங்க விற்பனை ₹550 கோடியாக சரிந்துள்ளது.

மேகதாது அணை விவகாரத்தில் CM ஸ்டாலின் மெத்தனமாக செயல்படுவதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேகதாது விவகாரத்தை பற்றி கவலைப்படாமல், SIR-க்கு போராட்டம் நடத்தி வருவதாகவும் விமர்சித்துள்ளார். தனது சகோதரரான ராகுல்காந்தி மூலம் சித்தராமையாவுக்கு ஸ்டாலின் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

உலகக்கோப்பை வென்ற மகளிர் அணியில் முக்கிய வீராங்கனையாக திகழ்ந்தவர் ஹர்லீன் தியோல். இவர் மைதானத்தில் மட்டும் அல்ல இன்ஸ்டாகிராமிலும் அசத்தி வருகிறார். நடிகைகளுக்கு சவால் விடும் அளவுக்கு இவர் போடும் போட்டோஸ்களுக்கு லைக்குகள் குவிகின்றன. PM மோடியிடமே உங்கள் பிராகாசத்துக்கு என்ன காரணம் என கேட்டு, வெட்கப்பட வைத்த ஹர்லீனின் அழகின் ரகசியம் என்ன என நெட்டிசன்கள் கேட்கின்றனர்.

தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட காலமாக திருமாவளவன் வலியுறுத்தி வருகிறார். ஆனால் 2026 தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை விசிக திமுகவிடம் வைக்கவில்லை என அவர் இப்போது கூறியுள்ளார். அதேசமயத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கையை நாங்கள் கைவிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கோவை கொடிசியா வளாகத்தில் இன்று நடைபெறும் வேளான் மாநாட்டை PM மோடி தொடங்கி வைக்கிறார். தொடந்து பி.எம். கிசான் திட்டத்தின், 21-வது தவணையான ₹18,000 கோடி உதவித்தொகையை 9 கோடி விவசாயிகளுக்கு வழங்குகிறார். இந்த திட்டத்தில் தமிழகத்தில் மட்டும் 21,80,204 விவசாயிகள் பயன்பெறுகின்றனர். மேலும், இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு PM மோடி விருது வழங்கி கௌரவிக்கிறார்.

புதிய அம்சங்களுடன் சிப் பதிக்கப்பட்ட மின்னணு பாஸ்போர்ட் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதில் ஆர்எப்ஐடி எனப்படும் ரேடியோ அலை அடையாள சிப் மற்றும் ஆன்டனா பொருத்தப்பட்டிருக்கும். இது உங்கள் பயோமெட்ரிக் மற்றும் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். 2035-க்குள் நாட்டிலுள்ள அனைத்து பாஸ்போர்ட்டுகளையும் மின்னணு முறைக்கு மாற்ற அரசு இலக்கு வைத்துள்ளது.

1917 – முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள்
1946 – ஆப்கானித்தான், ஐஸ்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன
1961 – நடிகர் விவேக் பிறந்தநாள்
1976 – நடிகர் அருண் விஜய் பிறந்த தினம்
1999 – சீனா தனது முதலாவது சென்சூ 1 விண்கலத்தை ஏவியது
2008 – நடிகர் எம். என். நம்பியார் மறைந்தநாள்

TN உட்பட பல்வேறு மாநிலங்களில், SIR பணிகளில் பூத் லெவல் ஆபிசர் எனும் BLO-கள் வேலை செய்து வருகின்றனர். ஆனால் இந்த பணியில் ஈடுபட்டுள்ள BLO-களும் வேலை அழுத்தம் பல மடங்கு உள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கேரளா, ராஜஸ்தானை சேர்ந்த 2 அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். குறுகிய நேரத்தில் SIR பணிகளை முடிக்க ECI திட்டமிட்டுள்ளதே இதற்கு காரணம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.