News April 9, 2025

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல்

image

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலுங்கானாவை ஆளும் காங்கிரஸ் அரசு, அங்கு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியிருப்பதாகவும், ஆனால், நாட்டில் அக்கணக்கெடுப்பை நடத்த மோடியும், ஆர்எஸ்எஸ்சும் மறுப்பதாகவும் அவர் சாடினார். சிறுபான்மையினருக்கு கிடைக்க வேண்டிய பங்கை அவர்கள் மறுப்பதாகவும் ராகுல் காந்தி விமர்சித்தார்.

Similar News

News December 6, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை
▶குறள் எண்: 541
▶குறள்:
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
▶பொருள்: குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.

News December 6, 2025

இந்த வார ஓடிடி ட்ரீட்!

image

இந்த வாரம் ரசிகர்களுக்கு விருந்தளிக்க அரை டஜன் படங்கள் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளன. *கோமதி சங்கரின் ‘STEPHEN’ : டிச.5, நெட்ஃபிளிக்ஸ் *பிரணவ் மோகன்லாலின் ‘டைஸ் ரே’: டிச.5, ஜியோ ஹாட்ஸ்டார் * ரஷ்மிகாவின் ‘The Girlfriend’: டிச.5, நெட்ஃபிளிக்ஸ் *அஸ்வின் குமாரின் ‘தூள்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்’: டிச.5, ஆஹா *விதார்த்தின் ‘குற்றம் புரிந்தவன்’: டிச.5, சோனி லைவ் *வைபவின் ‘The Hunter’ Chapter 1: டிச.5, ஆஹா

News December 6, 2025

12 மாவட்டங்களில் மழை பொழியும்: IMD

image

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோவை, திருப்பூர், தென்காசி, நெல்லை, தேனி, கன்னியாகுமரியில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இரவுநேரத்தில் வாகனம் ஓட்டுவோர் மிகுந்த கவனத்துடன் பயணிக்கவும். உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?

error: Content is protected !!