News May 7, 2025
சாதிவாரி கணக்கெடுப்பு: ஸ்டாலின் கேள்வி

சாதி அடிப்படையில் எதிர்க்கட்சிகள் மக்களை பிளப்பதாக கூறி வந்த மோடி அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இது I.N.D.I.A கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை தவிர்ப்பதற்கான மத்திய அரசின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததாக விமர்சித்த அவர், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும் என்று கேள்வி எழுப்பினார்.
Similar News
News September 15, 2025
Asia Cup: இன்று 2 லீக் போட்டிகள்

ஆசிய கோப்பை தொடர், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று 2 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. குரூப் A-யில் உள்ள UAE – ஓமன் அணிகள் மோதும் போட்டி, மாலை 5:30 மணிக்கு அபுதாபியில் தொடங்குகிறது. குரூப் B-யில் உள்ள இலங்கை – ஹாங்காங் அணிகள் விளையாடும் போட்டி, இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெறவுள்ளது.
News September 15, 2025
பாமக தலைவர் அன்புமணி கிடையாது: ராமதாஸ் தரப்பு

பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்தும், மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளதாக <<17715384>>வழக்கறிஞர் பாலு<<>> சற்றுமுன் அறிவித்தார். இந்நிலையில் பாமகவுக்கு சின்னம் மாம்பழம்தான்; தலைவர் அன்புமணிதான் என்று தேர்தல் ஆணையம் எங்கும் குறிப்பிடவில்லை. தேர்தல் ஆணையம் கொடுத்த தகவலை வழக்கறிஞர் பாலு தவறாக பரப்புகிறார் என்று ராமதாஸ் அணி பொதுச்செயலாளர் முரளி சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
News September 15, 2025
பி.எட்., படிப்பில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

பி.எட்., எம்.எட். படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட கலந்தாய்வுக்கு பின் 2 அரசு கல்லூரிகளில் 49 காலியிடங்கள் உள்ளதாகவும், 13 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 530 காலியிடங்கள் என மொத்தம் 579 இடங்கள் உள்ளன என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். மாணவர்கள் www.tngasa.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.