News April 13, 2024
நாட்டில் பிளவை ஏற்படுத்தவே சாதிவாரி கணக்கெடுப்பு

நாட்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்தவே எதிர்க்கட்சிகள், சாதிவாரி கணக்கெடுப்பு கோருவதாக பாஜக தலைவர் ஜேபி நட்டா குற்றம்சாட்டியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் சின்ட்வாராவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்புக்கு பாஜக எதிரானது அல்ல என்றும், ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவது மக்களிடையே பிளவை ஏற்படுத்தத்தான் என்றும் விமர்சித்தார்.
Similar News
News February 9, 2026
இன்றைய நல்ல நேரம்

▶பிப்ரவரி 9, தை 26 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 PM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: சப்தமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.
News February 9, 2026
விஜய் போட்டியிடும் 2 தொகுதிகள் இதுதான்?

2026 தேர்தலில் 2 தொகுதிகளில் விஜய் போட்டியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தனது முதல் மக்கள் சந்திப்பை திருச்சியில் இருந்துதான் தொடங்கினார். அப்போதே திருச்சியை குறிவைத்துதான் அவர், பரப்புரையை தொடங்குகிறார் என பேச்சு எழுந்தது. இந்நிலையில், சென்னை மண்டலத்தில் விருகம்பாக்கம் தொகுதியிலும், மத்திய மண்டலத்தில் திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளாராம்.
News February 9, 2026
திமுக கூட்டணியில் குழப்பம்: டிடிவி

அதிமுக – பாஜக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையவிருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ‘ஆட்சியில் பங்கு’ என காங்கிரஸின் டிமாண்டை சுட்டிக்காட்டி திமுக கூட்டணியில் குழப்பம் உள்ளது; ஆனால், அதிமுக கூட்டணி தெளிவாக இருக்கிறது எனக் கூறிய அவர், 2026 தேர்தலில் NDA கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


