News August 8, 2024
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு: வேல்முருகன்

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். உள்ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை சாதகமாக எடுத்து, இக்கணக்கெடுப்பை நடத்த அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில், அந்தந்த சமுதாயத்தில் பின்தங்கிய மக்களுக்கு இடஒதுக்கீடு, உள்ஒதுக்கீடு அளிக்கவும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
Similar News
News October 21, 2025
பருவமழையை எதிர்கொள்ள IAS அதிகாரிகள் நியமனம்

TN-ல் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தும் விதமாக கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு IAS அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தத்தமது மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்து, நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க CM அறிவுறுத்தியுள்ளார்.
News October 21, 2025
+12 படித்தால் போதும்.. ₹63,200 சம்பளத்தில் வேலை!

மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் உள்ள 228 Junior Secretariat Assistant பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 12-வது தேர்ச்சி பெற்ற 30 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 2 கட்ட தேர்வுக்கு பிறகு தேர்ச்சி பெறுவோருக்கு ₹19,900- ₹63,200 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். SHARE IT.
News October 21, 2025
BREAKING: முடிவை மாற்றினார் CM ஸ்டாலின்

தொடர்மழை காரணமாக CM ஸ்டாலினின் தென்காசி பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நலத்திட்ட உதவிகளை வழங்க அக்.24 அன்று அவர் தென்காசி செல்வதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, அவரது பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவரது பயணம் குறித்த புதிய தேதி விரைவில் வெளியாக உள்ளது. மழைக்கால பணிகளை CM ஸ்டாலின் முடுக்கிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.