News June 26, 2024

சாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

image

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். வளர்ச்சியின் பலன்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும், சென்றடைய வேண்டும். குறிப்பாக, சமூகச் சூழல் என்பது பல்வேறு சமூகங்களின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிப்பதால், சாதிவாரி கணக்கெடுப்புடன், பத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News December 7, 2025

பதற்றத்தை ஏற்படுத்தும் பாஜக, RSS: கருணாஸ்

image

தமிழர்களின் மத நல்லிணக்கத்தை பாஜக, RSS கலவரமாக மாற்றுகின்றன என்று கருணாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பிரித்தாளும் சூழ்ச்சிக்கு தமிழ் மக்கள் எப்போதும் அடிபணிய மாட்டார்கள் எனக்கூறிய அவர், தீபம் ஏற்றும் தூணை விட்டுவிட்டு, ஆங்கிலேயர் வைத்த கல்லை தீபத்தூண் என்று அழிச்சாட்டியம் செய்கின்றனர் எனவும் விமர்சித்துள்ளார்.

News December 7, 2025

குளிர்காலத்திலும் முகம் பளபளக்க ‘4’ டிப்ஸ்

image

★குளிர்காலத்திலும் சன்ஸ்கிரீன் பயன்படுவது, சருமத்தை பளபளப்பாக்கும் ★சரும ஆரோக்கியத்திற்கு ஆரஞ்சு, திராட்சை போன்ற வைட்டமின் சி அதிகமுள்ள பழங்களை சாப்பிடவும் ★அதிகமாக குளிர்கிறது என்று, ஓவர் சூடான நீரில் குளிக்க வேண்டாம். அது சருமத்தை வறட்சியாக்கும் ★உடலில் நீரிழப்பு ஏற்படும்போது சருமம் வறண்டு விடும். எனவே, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளவும். உங்களுக்கு தெரிஞ்ச சில டிப்ஸ சொல்லுங்க.

News December 7, 2025

கனடா எல்லையில் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

image

அலாஸ்கா மற்றும் கனடாவின் யூகோன் எல்லையில் 7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. வனப்பகுதியில் தான் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றாலும், இந்த வனப்பகுதிக்கு அருகே 91 கி.மீ., தூரத்தில் மக்கள் வசிப்பதாக USGS தெரிவித்துள்ளது. இந்நிலையில், சேதம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

error: Content is protected !!