News April 21, 2025
பள்ளிகளில் ஜாதி சின்னங்கள்.. அரசுத் தடை

பள்ளி வளாகங்களில் மாணவர்களின் ஜாதியை வெளிப்படுத்தும் வகையிலான சின்னங்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. அனைத்து மாவட்ட தலைமைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஜாதி அடையாளங்களை வைத்து மாணவர்கள் அடிக்கடி மோதுவதாகவும், ஆதலால் ஜாதிய பாடல்களை ஒளிபரப்பவோ, ஜாதியைக் குறிக்கும் வகையிலான ஆடைகளை அணியவோ அனுமதிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News December 4, 2025
டிசம்பர் 4: வரலாற்றில் இன்று

*1898–இயற்பியலாளர் கே.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள் *1910–முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் பிறந்தநாள் *1953-தமிழறிஞர் அ.வேங்கடாசலம் பிள்ளை நினைவு நாள் *1971-இந்திய கடற்படை கராச்சி துறைமுகத்தை தாக்கியது *1974–நடிகை அனுபமா குமார் பிறந்தநாள் *1984–மன்னாரில் இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் 150 தமிழ் மக்கள் படுகொலை
News December 4, 2025
T20 WC: இந்திய அணியின் ஜெர்ஸி அறிமுகம்

2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய வீரர்கள் அணியவுள்ள புதிய ஜெர்ஸி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ராய்ப்பூரில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ODI இடைவேளையின் போது ரோஹித் சர்மாவும், திலக் வர்மாவும் புதிய ஜெர்ஸியை அறிமுகம் செய்து வைத்தனர். மேலும், மைதானத்தில் பிரமாண்ட ஜெர்ஸியும் ரசிகர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. இந்திய அணியின் புது ஜெர்ஸி எப்படி இருக்கு? கமெண்ட் பண்ணுங்க
News December 4, 2025
ஆபாச புகைப்படம்.. கொந்தளித்த ரஷ்மிகா

AI பயன்படுத்தி பெண்களை ஆபாசமாக சித்தரிப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என ரஷ்மிகா மந்தனா வலியுறுத்தியுள்ளார். AI-ல் உருவாக்கப்பட்ட ரஷ்மிகாவின் ஆபாச போட்டோ SM-ல் காட்டுத் தீ போல் பரவியது. இதுகுறித்து X-ல் அவர், AI என்பது முன்னேற்றத்திற்கான ஒரு சக்தி, ஆனால் அதை ஆபாசமான விஷயங்களை உருவாக்கவும், பெண்களை குறிவைத்து தாக்கவும் சிலர் பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.


