News June 16, 2024

அதிமுகவில் தற்போது சாதி அரசியல்: சசிகலா

image

அதிமுகவில் தற்போது குறிப்பிட்ட சாதியினர் சாதி அரசியல் செய்து வருவதாக சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நானும், ஜெயலலிதாவும் யாரிடமும் சாதி பார்த்து பழகியதில்லை எனக் கூறியுள்ளார். அவ்வாறு நான் சாதி பார்த்து பழகியிருந்தால், எடப்பாடி பழனிசாமியை, தமிழக முதலமைச்சராக ஆக்கியிருக்க மாட்டேன் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

Similar News

News September 13, 2025

லோகேஷ் – அமீர்கான் படம் கைவிடப்பட்டதா?

image

லோகேஷ் கனகராஜ் – அமீர்கான் இணைந்து பணியாற்றவிருந்த படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘சித்தாரே ஜமீன் பர்’ பட நிகழ்ச்சியில் அமீர்கான், லோகேஷ் இயக்கத்தில் சூப்பர்ஹீரோ படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறினார். ஆனால் தற்போது கமல் – ரஜினி படம், கைதி 2-ல் லோகேஷ் கவனம் செலுத்தி வருகிறார். அமீர்கான் உடனான படம் கைவிடப்பட காரணம் என்ன? தேதிகள் பிரச்னையா என உறுதியான தகவல் தெரியவில்லை.

News September 13, 2025

செப்டம்பர் 13: வரலாற்றில் இன்று

image

*1948 – ஐதராபாத்தை இந்திய ஒன்றியத்தில் இணைக்க துணை பிரதமர் வல்லபாய் பட்டேல் ராணுவத்துக்கு உத்தரவிட்டார். *1960 – நடிகர் கார்த்திக் பிறந்தநாள். *2008 – டெல்லியில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 30 பேர் உயிரிழப்பு.

News September 13, 2025

BCCI-க்கு வலுக்கும் கண்டனம்

image

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பஹல்காம் தாக்குதலால் ஏற்பட்ட வடு இன்னும் மறையாத நிலையில் பாகிஸ்தானுடன் விளையாடுவது அவசியமா என்றும் பணம் சம்பாதிப்பது மட்டுமே உங்கள் நோக்கமா எனவும் BCCI-க்கு SM-ல் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதனிடையே, மத்திய அரசு அனுமதித்ததால் பாக். உடன் விளையாடுவதாக BCCI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!