News May 25, 2024
வங்கிக் கணக்கில் பணம்: பட்டியலிட்ட தமிழக அரசு

புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் 6 -12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வியில் சேர்ந்த 2.73 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், 1,26,637 மகளிருக்கு ₹1,047 கோடி திருமண நிதியுதவி, 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதம் ₹1,500 போன்ற பல்வேறு திட்டங்களின் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.
Similar News
News April 6, 2026
பிரேமலதா, துரைமுருகன், காந்தி வேட்புமனு தாக்கல்

காட்பாடியில் துரைமுருகன், ராணிப்பேட்டையில் அமைச்சர் <<19578964>>காந்தி<<>>, விருத்தாசலத்தில் பிரேமலதா, கோவை தெற்கில் செந்தில் பாலாஜி, குறிஞ்சிப்பாடியில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், போடியில் ஓபிஎஸ், ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன், சிவகங்கையில் கருணாஸ், நாகையில் ஜவாஹிருல்லா, திருக்கோவிலூரில் கெளதம சிகாமணி, விருதுநகரில் விஜய பிரபாகரன் உள்ளிட்ட திமுக கூட்டணி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
News April 6, 2026
டேட்டிங் APP.. கணவன், மனைவிக்கு தெரியாமல் உறவு!

இந்தியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் டேட்டிங் APP-களின் பயன்பாடு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. அதிலும் திருமணம் மீறிய உறவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஆய்வு கூறுகிறது. 65% ஆண்களும், 35% பெண்களும் என நாடு முழுவதும் சுமார் 40 லட்சம் பேர் டேட்டிங் APP-களை பயன்படுத்துகின்றனர். இதில், 18% உடன் பெங்களூரு முதலிடத்திலும், ஹைதராபாத் 17% உடன் 2-ம் இடம், டெல்லி 11% உடன் 3-ம் இடத்தில் உள்ளது.
News April 6, 2026
நயினார், சவுமியா வேட்புமனு தாக்கல்

கடைசி நாளான இன்று அரசியல் தலைவர்கள் விறுவிறுப்பாக வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். தருமபுரியில் சவுமியா அன்புமணி, சாத்தூரில் நயினார், கோவை வடக்கில் வானதி, அவிநாசியில் எல்.முருகன், சென்னை மயிலாப்பூரில் தமிழிசை, நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர்.கேந்தி, அறந்தாங்கியில் கவிதா, ராசிபுரத்தில் பிரேம்குமார் உள்ளிட்ட NDA கூட்டணி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.


