News March 17, 2025
அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து

அமைச்சர்கள் பெரியகருப்பன், சிவசங்கர் மீதான வழக்குகளை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கக் கோரி 2018இல் அரியலூரில் போராட்டம் நடத்தியது தொடர்பாகவும், அதேபோல் 2021இல் பதிவான தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்யக் கோரியும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், அனுமதியின்றி போராடியது, தேர்தல் வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
Similar News
News March 17, 2025
உரிமைகளை தடுப்பது நியாயமா? – பொங்கிய சரத்!

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அண்ணாமலை, தமிழிசை, H.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதற்கு, பாஜகவின் சரத் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். நியாயமான போராட்ட உரிமைகளை தடுப்பது நியாயமா? என X தளத்தில் கேள்வி எழுப்பி CM ஸ்டாலினை டேக் செய்துள்ளார்.
News March 17, 2025
ஓபிஎஸ் கேள்வி.. குலுங்கி குலுங்கி சிரித்த இபிஎஸ்

சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் சேகர்பாபுவிடம், ராஜேந்திரன் எம்எல்ஏ (திருவள்ளூர்), திருவாலங்காடு கோயிலில் மாந்திரீக பூஜை செய்ய வசதி செய்து தரப்படுமா? என கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட ஓபிஎஸ், அமைச்சர் இதற்கு விளக்கம் தருவாரா என நகைச்சுவையாக கேட்டார். இதைக்கேட்ட இபிஎஸ் குலுங்கி குலுங்கி சிரித்தார். இதையடுத்து எம்எல்ஏ ராஜேந்திரன், பரிகாரபூஜையையே மாந்திரீக பூஜை எனக் கூறியதாகக் கூறினார்.
News March 17, 2025
குமரி அனந்தன் ICUவில் அட்மிட்

காங்., மூத்த தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன்(91) சென்னை அப்போலோ ICUவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக ஏற்கெனவே வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்ததால், சென்னை வானகரம் அப்போலோ ஹாஸ்பிடலுக்கு அழைத்து வரப்பட்டு ICU வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரில் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.