News April 15, 2025
ஓயோ நிறுவனர் மீது வழக்குப்பதிவு

ஜெய்ப்பூரில் மோசடி புகாரின் அடிப்படையில் ஓயோ உரிமையாளர் ரிதேஷ் அகர்வால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓயோ தளத்தில் வெளியிடப்பட்ட தவறான தகவலால் தங்களுக்கு 2.66 கோடிக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் வந்துள்ளதாக சம்ஸ்காரா என்ற விடுதியின் உரிமையாளர் புகாரளித்துள்ளார். தங்கள் விடுதியின் மூலம் அதிகமான புக்கிங் நடைபெற்றதாக ஓயோ மோசடி செய்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News January 12, 2026
18 வருஷ வெயிட்டிங் ஓவர்! மீண்டும் டபுள் டக்கர் பஸ்!

1970-ல் கம்பீரமாக வலம் வந்த டபுள் டக்கர் பஸ்கள் சென்னையின் அடையாளமாகவே இருந்தன! பஸ்சின் மேல்தளத்தில் வேடிக்கை பார்த்து பயணிக்கவே, சுற்றுலா பயணிகள் சென்னைக்கு படையெடுத்த காலமது! ஆனால், அதிக பராமரிப்பு செலவு காரணமாக 2008-ல் சேவை நிறுத்தப்பட்டது. 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இன்று டபுள் டக்கர் பஸ் சேவையை CM ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள நிலையில், இது பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் என நம்பப்படுகிறது.
News January 12, 2026
காங்கிரஸாரின் கருத்தை கேட்க முடியாது: அமைச்சர்

திமுக கூட்டணியில் காங்., மதில் மேல் பூனையாக இருப்பதாக பேசப்பட்டுவருகிறது. இந்நிலையில், காங்கிரஸுக்கு சாதகமான தொகுதிகளை ஒதுக்கிவிட்டதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். காங்கிரஸில் ஆயிரம் பேர் ஆயிரத்தெட்டு கருத்துகளை சொல்வார்கள்; அதையெல்லாம் கேட்க முடியாது எனவும் கூறியுள்ளார். மேலும், கூட்டணி நலன் குறித்து காங்கிரஸ் தலைவருடன் பேசி திமுக தலைவர் முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார்.
News January 12, 2026
தங்கம், வெள்ளி.. அதிரடியாக ₹12,000 விலை மாற்றம்

<<18833327>>தங்கம் போலவே<<>> வெள்ளி விலையும் இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சில்லறை விலையில் கிராமுக்கு ₹12 உயர்ந்து ₹287-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹12,000 உயர்ந்து ₹2,87,000-க்கும் விற்பனையாகிறது. பொங்கல் பண்டிகைக்கு சீர் பொருள்கள் வாங்க நினைத்தவர்கள் தங்கம், வெள்ளி விலை உயர்வால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


