News April 8, 2024
நயினார் நாகேந்திரன் மீது வழக்குப் பதிவு

நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு மேல் விதிகளை மீறி தேர்தல் பிரசாரம் செய்ததாக தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ரயிலில் ₹4 கோடி பணம் எடுத்துச் சென்ற விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 17, 2026
மதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது

தமிழக தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, மதிமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று வைகோ வெளியிடுகிறார். இதில் மக்கள் நலன் சார்ந்த, குறிப்பாக மகளிர் மேம்பாட்டுக்கான அம்சங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், 1 தொகுதியில் சொந்த சின்னத்திலும் மதிமுக வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
News March 17, 2026
ஒருநாள் தோனி என் இடத்தில் இருப்பார்: கம்பீர்

உங்களின் புன்னகை அழகாக உள்ளது என T20 உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் கம்பீரை தோனி குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தன்னை தோனி சிரிக்க சொன்னதில் மகிழ்ச்சி என்று கம்பீர் கூறியுள்ளார். மேலும், பயிற்சியாளராக தன்னுடைய இடத்தில் தோனி ஒருநாள் இருப்பார் என்ற கம்பீர், அப்போது தானும் அவரை சிரிக்கச் சொல்வேன் என்றும் தெரிவித்துள்ளார். ‘இப்போதான் களம் சூடுபிடிக்குது’ என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.