News March 29, 2024
எல்.முருகன் மீது வழக்குப்பதிவு

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக மத்திய இணையமைச்சரும், நீலகிரி வேட்பாளருமான எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை துணை தாசில்தார் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. உதகையில் அவர் சில கோயில்களுக்கு சென்றதாகவும், அனுமதியின்றி பரப்புரை கூட்டம் நடத்தியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
Similar News
News January 15, 2026
பொங்கலன்று இந்த தவறுகளை மட்டும் செஞ்சிடாதீங்க!

தைப்பொங்கல் திருநாளான இன்று, இந்த தவறுகளை மட்டும் கண்டிப்பாக செஞ்சிடாதீங்க *ஒற்றைப் பானையில் பொங்கல் வைக்கக்கூடாது. பால் பொங்கல், சர்க்கரை பொங்கல் என 2 பொங்கல் வைக்க வேண்டும் *தேவைக்கு அதிகமாக பொங்கல் செய்து அதனை குப்பையில் போடக்கூடாது *அசைவம் சாப்பிட வேண்டாம் *பொங்கல் பானையை அடுப்பில் வைக்கும் போது வெறும் பானையாக வைக்கக் கூடாது. கொஞ்சம் பாலும் தண்ணீரும் ஊற்றி அடுப்பில் வைக்கலாம். SHARE IT.
News January 15, 2026
6-வது முறையாக பட்டத்தை தட்டி தூக்குமா இந்தியா?

16-வது U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஜிம்பாப்வேயில் தொடங்குகிறது. முதல் போட்டியில் இந்தியாவும், அமெரிக்காவும் மோதுகின்றன. இதுதவிர, ஜிம்பாப்வே – ஸ்காட்லாந்து, டான்ஸானியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் இன்று மோதுகின்றன. இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதுவரை 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா, 6-வது முறையாக தொடரை வெல்லுமா என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
News January 15, 2026
ஐம்பூதங்களின் வழிபாடான பொங்கல் பண்டிகை

மதங்களை கடந்த, ஐம்பூதங்களின் வழிபாடாக பொங்கல் பண்டிகை உள்ளது. காற்றின் உதவியுடன் எரியும் நெருப்பில், மண்ணால் செய்யப்பட்ட பானையில் தண்ணீரை ஊற்றி, அதில் பச்சரிசி பொங்கல் வைத்து ஆகாயத்தில் உள்ள சூரியனுக்கு படைப்பதே பொங்கல் பண்டிகை. நிலம், நீர்,ஆகாயம், காற்று, நெருப்பு ஆகியவற்றின் உதவியுடன் மனிதன் பக்குவப்படும் இந்த வாழ்வை நினைவு கூறும் விழாவாகவும் கூறப்படுகிறது.


