News April 13, 2024
சர்ச்சைக்குரிய பாஜக எம்பி மீது வழக்குப்பதிவு

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உ.பி.,யின் கைசர்கஞ்ச் தொகுதிக்கு பாஜக இன்னும் வேட்பாளரை அறிவிக்காத நிலையில், அங்கு மீண்டும் சீட் கேட்டு அடம்பிடித்து வரும் பிரிஜ் பூஷண் சிங், காத்ரா தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு 25 முதல் 30 வாகனங்கள் புடைசூழ அனுமதியின்றி பயணித்துள்ளார்.
Similar News
News November 16, 2025
BREAKING: முட்டை விலை வரலாறு காணாத உயர்வு

நாமக்கல் கோழிப்பண்ணை வரலாற்றில் முதல்முறையாக முட்டை கொள்முதல் விலை ₹6-ஐ தொட்டுள்ளது. நேற்று புதிய உச்சமாக ₹5.95 ஆக உயர்ந்த நிலையில், இன்று மேலும் 5 காசுகள் அதிகரித்துள்ளது. கோழித் தீவன மூலப் பொருள்களின் விலை உயர்வே, முட்டையின் விலையேற்றத்திற்கு காரணம் என பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். கொள்முதல் விலை அதிகரிப்பால், சில்லறை விற்பனையில் ஒரு முட்டை ₹7 முதல் ₹8 வரை விற்பனையாக வாய்ப்புள்ளது.
News November 16, 2025
பயங்கரவாதியின் வீட்டை தகர்த்ததற்கு J&K CM கண்டனம்

டெல்லி வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்த்திய உமரின் <<18283443>>வீட்டை தகர்த்ததற்கு<<>> ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற செயலால் ஒருவரின் கோபம் மட்டுமே அதிகரிக்கும் எனவும், இது எதுவும் இல்லாமலேயே J&K-வில் தீவிரவாத செயல்பாடுகள் குறைந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், இதுபோன்ற செயல்களால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியும் என்றால், அது எப்போதோ ஒழிந்திருக்கும் எனவும் அவர் பேசியுள்ளார்.
News November 16, 2025
சபரிமலையில் பக்தர்களுக்கு புதிய தடை

<<18300654>>சபரிமலை நடை<<>> இன்று திறக்கப்பட்ட நிலையில், சன்னிதானத்தில் இந்த ஆண்டு முதல் கேமரா, செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் 18-ம் படிக்கு மேல் செல்போன் பயன்படுத்தவும், போட்டோ மற்றும் வீடியோ எடுக்கவும் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருகையை ஒட்டி இந்த கட்டுப்பாடுகளை தேவசம்போர்டு விதித்துள்ளது.


