News May 13, 2024

பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு

image

தெலங்கானாவில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் ஆதார் அட்டையை வாங்கி பாஜக வேட்பாளர் மாதவி லதா சோதனை செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், மாதவி லதா மீது 171C, 186, 505(1)(c) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக ஹைதராபாத் மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

Similar News

News April 2, 2026

சத்தமில்லாமல் ஷமி படைத்த மாபெரும் சாதனை!

image

DC-க்கு எதிரான ஆட்டத்தில் LSG வீரர் ஷமி, முதல் பந்திலேயே KL ராகுலின் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம், ஒரு இன்னிங்ஸின் முதல் பந்தில் ஷமி விக்கெட் வீழ்த்துவது இது 5-வது முறையாகும். 3 முறை இச்சாதனையை நிகழ்த்தி, பிரவின் குமார், உமேஷ் யாதவ், ட்ரெண்ட் போல்ட், லஷித் மலிங்கா, புவனேஷ்வர் குமார், அஷோக் திண்டா, பேட் கம்மின்ஸ் ஆகியோர் 2-வது இடத்தில் உள்ளனர்.

News April 2, 2026

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. கண்டிப்பா படிங்க

image

முன்பதிவு செய்த பயணிகள் ஏறும் ரயில் நிலையத்தை மாற்றுவதற்கான கால இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது. Chart தயார் செய்வதற்கு 24 மணிநேரத்துக்கு முன்பே ஏறும் நிலையத்தை மாற்ற முடியும். ஆனால், தற்போது ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்புவரை ஏறும் நிலையத்தை மாற்றலாம். ஒருவேளை நீங்கள் குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் ஏறவில்லையென்றால், அது வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ளவர்களுக்கு அளிக்கப்படும். SHARE

News April 2, 2026

தாயின் உரிமையை மறுக்க நான் யார்? பிரகாஷ் ராஜ்

image

சர்ச்சில் நடந்த தனது தாயாரின் இறுதிச்சடங்கில் நாத்திகவாதியான பிரகாஷ் ராஜ் பங்கேற்றது ஏன் என SM-ல் பலர் விமர்சித்து வந்தனர். அதற்கு தனது X பக்கத்தில், தன் தாயார் கடவுளை நம்பினார்; அவர் நம்பிக்கையின்படி நல்லடக்கம் செய்யும் உரிமையை அவருக்கு மறுக்க தான் யார் என கேள்வி எழுப்பியுள்ளார். இது நாம் ஒருவருக்கொருவர் அளிக்கும் அடிப்படை மரியாதை; வெறுப்பை பரப்பும் அரக்கர்கள் இதை உணர்வார்களா என சாடியுள்ளார்.

error: Content is protected !!