News April 19, 2025
நடிகர் மீது வழக்குப்பதிவு

துணை நடிகை அளித்த புகாரில் நடிகர் ‘காதல்’ சுகுமார் மீது மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணமானதை மறைத்து, தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, தனிக்குடித்தனம் நடத்தி நகை, பணம் மோசடி செய்ததாக துணை நடிகை புகார் அளித்திருந்தார். பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ள சுகுமார், ‘காதல்’ படத்தில் ஹீரோ பரத்திற்கு நண்பனாக நடித்ததன் மூலம் பிரபலமாகி ‘காதல்’ சுகுமார் எனப் பெயர் பெற்றார்.
Similar News
News December 1, 2025
BREAKING: விபத்தில் அதிமுக முக்கிய தலைவர் மரணம்

அதிமுக மூத்த தலைவர் வி.சி.ராமையா சாலை விபத்தில் உயிரிழந்தார். 2012-ல் புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் பொருளாளராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார். வாண்டாகோட்டை அருகே இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்றபோது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான ராமையாவின் மரணம் அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
News December 1, 2025
சிவகங்கை பஸ் விபத்து: PM மோடி இரங்கல்

காரைக்குடி அருகே <<18432348>>அரசு பஸ்கள் விபத்தில்<<>> ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வேதனை அளிப்பதாக PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உறவுகளை இழந்தவர்களுக்காக பிரார்த்திப்பதாக கூறிய அவர், PMNRF-ல் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 1, 2025
கேப்டன் கில்லின் நிலை என்ன?

SA-வுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக டெஸ்ட் & ODI தொடரில் இருந்து விலகிய அவர், இன்று BCCI-யின் சிறப்பு மையத்தில் (CoE) பயிற்சியை தொடங்கவுள்ளாராம். ஓரிரு நாள்களில் பேட்டிங் பயிற்சியை அவர் தொடங்குவார் என்றும், அதை தொடர்ந்தே SA-வுக்கு எதிரான T20 போட்டிகளில் கில் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.


