News November 16, 2024
மகளை கடத்திய பெற்றோர் மீது வழக்கு

புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் அருள். இவர் அதே பகுதியை சேர்ந்த அனிதா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நேற்று புதுச்சத்திரம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த அருளை அனிதாவின் தந்தை சக்திவேல், தாய் ராஜகுமாரி மற்றும் உறவினர்கள் அருணை தாக்கிவிட்டு மகள் அனிதாவை கடத்தி சென்றனர். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
Similar News
News November 12, 2025
கடலூர்: டிராக்டர் சக்கரம் ஏறி பரிதாப பலி

கடலூர் கம்மியம்பேட்டை பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (56). இவர் குடிநீர் எடுத்து செல்லும் டிராக்டர் வண்டியின் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல குடிநீர் வண்டியில் கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது, வேல்முருகன் வண்டியில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில் வண்டியின் பின் சக்கரம் லோகநாதன் மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
News November 12, 2025
கடலூர்: கடைசி தேதி அறிவிப்பு..

கடலூர் மாவட்டத்தில் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15-ம் தேதியே கடைசி நாளாகும் என வேளாண் இணை இயக்குனர் லட்சுமி காந்தன் தெரிவித்துள்ளார். கூட்டுறவு கடன் சங்கம், வங்கிகளில் கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களில் பதிவு செய்து பயிர் காப்பீட்டு தொகையில் விவசாயிகள் 1.5% மட்டும் காப்பீடு கட்டணமாக, அதாவது ரூ.564 செலுத்தி பயிர்களை காப்பீடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 12, 2025
கடலூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

கடலூர் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க


